கடைசி நேரத்தில் நின்ற திருமணம்.. மணமகள் சொன்ன பகீர் காரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

Tirunelveli Wedding Called Off | திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 29, 2025) ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதன் காரணமாக அவர் திருமணத்தை நிறுத்துவதாக கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் நின்ற திருமணம்.. மணமகள் சொன்ன பகீர் காரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

மாதிரி புகைப்படம்

Published: 

30 Aug 2025 09:07 AM

திருநெல்வேலி, ஆகஸ்ட் 30 : திருநெல்வேலியில் (Tirunelveli) தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் குடும்பத்தினர் மற்று உறவினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணமாக அவரை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விலை பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். இவருக்கும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது ஓட்டுநர் ஒருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 29, 2025) இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில், மணமேடை வரை வந்த மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சேலத்தில் பயங்கரம்.. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?

மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு?

மணமகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பெண் தொடர்ப்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தனக்கும், மணமகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண், உடனடியாக மணமகனை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி என் கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த பெண் உடனான தொடர்பை துண்டிக்குமாறு மணமகள் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மணமகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் அது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் செய்வது அரியாது குழம்பியுள்ளனர். இவ்வாறு நாட்கள் செல்ல திருமணம் நடைபெறும் நாள் வந்துள்ளது. ஆனால், மணப்பெண் திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தாலி கட்டுவதற்கு முன்னதாக தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடந்தவற்றை உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போதும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில், வேறு வழியின்றி இருவரையும் அனுப்பி வைத்தனர். கடைசி நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.