திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
Tiruchendur Special Bus: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக நாளை 2025, ஜூலை 4 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சிறப்பு பேருந்துகள்: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 2025 ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் விமர்சையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக நாளை அதாவது ஜூலை 4 2025 தேதியான நாளை முதல் தமிழக போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 6 2025 வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முன் பதிவு தமிழக போக்குவரத்து கழகத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுகளாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாகும். முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சூரசம்ஹாரம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
சிறப்பு பேருந்து ஏற்பாடு:
அந்த வகையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது குடமுழுக்கு விழாவானது நடைபெற உள்ளது இந்த நிகழ்வின் போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக தமிழக போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை ஜூலை 4, 2025 தேதியான நாளை முதல் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “ ஜூலை 7 2025 அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஜூலை 4 2025 முதல் ஜூலை 6,2025 வரை கீழ்கண்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் ஜூலை 7 2025 அன்று திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும்?
மேலும், “ சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஈரோடு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது