வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல.. திருட வந்த வீட்டில் எதுவும் கிடைக்காததால் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Thief Left Letter For House Owner | திருநெல்வேலியில் உள்ள பழைய பேட்டை பகுதியில் பூட்டி இருந்த வீடு ஒன்றில் ஒருவர் திருட முயன்றுள்ளார். அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாத நிலையில் விரக்தியடைந்த திருடன் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்திவிட்டு சென்றுள்ளார்.

மாதிரி புகைப்படம்
பழைய பேட்டை, நவம்பர் 26 : திருநெல்வேலியில் (Tirunelveli) வீடு ஒன்றில் திருட சென்ற நபர், அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் கடும் விரக்தி அடைந்துள்ளார். இந்த நிலையில், பொறுமையை இழந்த அவர், வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னதாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருட வந்த வீட்டில் எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன்
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூட்டிய வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு திருட வரும் திருடர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்வது, செய்திகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பேட்டிகளை கண்டு மனம் இறங்கி திருடிய நகைகளை திரும்ப வந்து வைத்துவிட்டு செல்வது போன்ற சுவாரஸ்ய சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும். அந்த வகையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த நபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்? வானிலை ரிப்போர்ட்
எனக்கு மனசே கேக்கல – கடிதம் எழுதி வைத்த திருடன்
திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜேம்ஸ் பால் என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுள்ளார். அவரது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட நபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளார். வீட்டில் இருக்கும் நகை, பணம் என அனைத்தையும் திருடிச் செல்லலாம் என்று அவர் நினைத்துள்ளார்.
இதையும் படிங்க : நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்.. சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தம்
வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்
ஆனால் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது. அதாவது அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்த திருவன் முழுவதுமாக தேடியுள்ளார். ஆனால், அதில் நகை, பணம் என எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. திருட வந்த இடத்தில் எதுவும் கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த அந்த நபர் வீட்டின் உரிமையாளருக்கு நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அதில், வீட்டுல ஒத்த ரூபாய் கூட இல்ல. அடுத்த தடவ என்னைய மாதிரி யாராச்சும் திருட வந்தா, அவர்களையாச்சும் ஏமாத்தாம காசு வைக்கவும். ஒத்த ரூபாய் கூட இல்லாத வீட்டுக்கு இத்தன சிசிடிவி கேமரா வேற. போங்கடா.. என்னை மன்னித்து விடுங்கள்.. இப்படிக்கு திருடன் என்று அந்த நபர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.