முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 14, 2025) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

14 Aug 2025 08:46 AM

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 14 2025 தேதியான இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் அரசின் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் துவங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒப்புதல் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது வியட்நாம் நாட்டை சேர்ந்த கார் நிறுவனமான விண்ஃபாஸ்ட் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.

தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்கும் முயற்சி:

தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய தொழில் நிறுவன பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடி புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்:

இந்த நிலையில் ஆகஸ்ட் 14 2025 தேதியான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் துவங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்த்து முக்கிய பல்வேறு முதலீடுகள் மற்றும் சலுகைகள் ஒப்புதல் அளிக்கப்பட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: 13 நாட்கள் போராட்டம்.. இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களை கைது செய்த காவல் துறை..

வழக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாதம் அதாவது 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி லண்டன் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார். 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழகம் திரும்புகிறார்.

அங்கு பல்வேறு தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.