Cyclone Montha: மோன்தா புயல் எப்போது, எங்கு கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Tamilnadu Weather Update: மோன்தா புயல் காரணமாக நாளை அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிக கனமழையும் பெய்யும்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா
மோன்தா புயல் (Cyclone Montha) காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD Chennai) தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மோந்தா புயல் கரையை கடக்கும்போது தமிழ்நாட்டில் வடக்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 அக்டோபர் 28ம் தேதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோந்தா புயல் எப்போது தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் எங்கு, எப்போது கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம் அளித்துள்ளார்.
மோன்தா புயல் எப்போது தீவிர புயலாக வலுப்பெறும்..?
Cyclone Alert for Andhra Pradesh, Yanam and adjoining South Odisha coasts https://t.co/n9eKhSx9I8 pic.twitter.com/mih0jjYlMu
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 27, 2025
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா இன்று அதாவது 2025 அக்டோபர் 27ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, “நேற்ரு அதாவது 2025 அக்டோபர் 26ம் தேதி மோன்தா புயல் இரவு 11 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகளில் வங்க கடல் பகுதிகளில் நிலவுகிறது. இன்று அதாவது 2025 அக்டோபர் 27ம் தேதி காலை 11 மணி முதல் கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 17 கிமீ வேகத்தில் மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கில் சுமார் 480 கிமீ தொலைவிலும், ஆந்திராவில் இருந்து 530 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 560 கிமீ தொலைவிலும் மோந்தா புயல் நிலை கொண்டுள்ளது.
மோன்தா புயல் வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் நகர்ந்து நாளை அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி காலை தீவிர புயலாக வலுபெறும். மேலும், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடற்கரை பகுதியில் மஜ்லி பட்டினம் அல்லது காக்கி நாடா பகுதியில் 2025 அக்டோபர் 28ம் தேதி மாலை அல்லது இரவில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் 90 முதல் 100 கிமீ வேகத்திலும், இடையிடையே 110 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
ALSO READ: நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
நாளை மற்றும் நாளை மறுநாள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
மோன்தா புயல் காரணமாக நாளை அதாவது 2025 அக்டோபர் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிக கனமழையும் பெய்யும் என்றும், 2025 அக்டோபர் 29ம் தேதி முதல் 2025 நவம்பர் 2ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.