வந்தாச்சு தீபாவளி.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு..

Diwali Bonus: டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) ஊழியர்களுக்கும் போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் விற்பனைக்கடை பணியாளர்கள் உள்பட மொத்தம் 24,816 பேருக்கு ரூ.40.62 கோடி செலவில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

வந்தாச்சு தீபாவளி.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Oct 2025 06:59 AM

 IST

சென்னை, அக்டோபர் 17, 2025: வரும் திங்கட்கிழமை, அதாவது 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தரப்பில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தீபாவளிக்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் உள்ளிட்டவை வாங்கி தீபாவளி பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். வழக்கம்போல் தீபாவளி காலத்தில் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் அல்லது அரியர்ஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்காக கடந்த வாரமே அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு:

இந்நிலையில், தற்போது டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) ஊழியர்களுக்கும் போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் விற்பனைக்கடை பணியாளர்கள் உள்பட மொத்தம் 24,816 பேருக்கு ரூ.40.62 கோடி செலவில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: 19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய பணியாளர்களுக்கு 2024-25 ஆண்டிற்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத்தொகை 20 விழுக்காட்டுக்கு வரை வழங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளுக்கப்போகும் மழை.. பிரதீப் ஜான்

மேலும், “இந்த நடவடிக்கை மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அதிக ஈடுபாட்டுடனும் ஊக்கத்துடனும் பணியாற்ற உறுதி செய்யப்படுவதுடன், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் உதவும்,” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.