24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்

TVK Party Vijay Speech at Protest: சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டாத்தில் கலந்துக்கொண்டு பேசிய விஜய், அஜித் குமார் குடும்பத்திடம் முதலமைச்சர் சாரி கேட்டது போல 24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் - த.வெ.க தலைவர் விஜய்

தவெக போராட்டம்

Updated On: 

13 Jul 2025 11:32 AM

த.வெ.க போராட்டம், ஜூலை 13, 2025: கடந்த ஆண்டுகளில் நடைபெற்றுள்ள லாக் அப் மரணங்களை கண்டிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல் மரணங்களில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அஜித் குமார் குடும்பத்திடம் முதலமைச்சர் சாரி கேட்டது போல 24 குடும்பங்களிடமும் முதலமைச்சர் சாரி கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆட்சி ’சாரி மா’ மாடலாக மாறியுள்ளது.

த.வெ.க போராட்டம்:

தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கடந்த ஆண்டுகளில் நடந்த லாக் கப் மரணங்களை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகை ஏந்தி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், “மடப்புரம் அஜித் குமார் அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர். அந்த சாதாரண குடும்பத்திற்கு நடந்த அந்த கொடுமைக்கு முதலமைச்சர் சாரி கூறியுள்ளார். தவறில்லை .

மேலும் படிக்க: லாக் அப் மரணங்களை கண்டித்து த.வெ.க இன்று சென்னையில் போராட்டம்.. கலந்துக்கொள்வாரா விஜய்?

ஆனால் அதோடு சேர்த்து இதனையும் முதலமைச்சர் செய்ய வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து 24 பேர் விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர். அதற்கு அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் சாரி கேட்ட முதலமைச்சர், 24 குடும்பங்களுக்கும் சாரி கேட்க வேண்டும். அதேபோல் 24 குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

சிபிஐக்கு வழக்கு மாற்றியது அவமானம் இல்லையா?

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் மரணம் குறித்து சிபிஐ வழக்க மாற்றப்பட்டதற்கு அவமானம் எனக் கூறிய நீங்கள் தற்போது நீங்கள் செய்ததற்கு என்ன சொல்ல போகிறீர்கள். இது அவமானம் இல்லையா. ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் கைகோர்த்து இருக்கிறது திமுக. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் முதல் இந்த அஜித்குமார் வழக்கு வரை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால் எதற்கு முதலமைச்சர்? இந்த ஆட்சி எதற்காக?

சாரி மா மாடலாக மாறிய சர்கார்:


எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து பதில் வரப்போவதில்லை. ஏனென்றால் உங்களிடம் பதில் கிடையாது. அதிகபட்சமாக உங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய பதில் சாரிமா, தெரியாமல் நடந்து விட்டது. அவ்வளவுதானே இந்த விளம்பர மாடல் திமுக சர்க்கார் சாரி மா மாடல் சர்க்காராக மாறி உள்ளது.செய்த தவறுக்கு எல்லாம் பரிகாரமாக சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்களோடு மக்களாக நின்று சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்” என பேசியுள்ளார்.