‘இந்தி தெரியும் போடா’ பயணிகளின் கவனத்தை பெற்ற தமிழக விமானி.. வைரல் வீடியோ!

Pilot Pradeep Krishnan Viral Video : பாட்னாவில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி, பயணிகளிடம் இந்தியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதீப் கிருஷ்ணன் வேடிக்கையான இந்தி பேச்சு அங்கிருக்கும் பயணிகளை வெகுமாக கவர்ந்தது. மேலும், பயணிகளுக்கு இந்தியில் அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.

இந்தி தெரியும் போடா பயணிகளின் கவனத்தை பெற்ற தமிழக விமானி..  வைரல் வீடியோ!

விமானி பிரதீப் கிருஷ்ணன்

Updated On: 

24 Aug 2025 15:27 PM

சென்னை, ஆகஸ்ட் 24 : தமிழகத்தைச் சேர்ந்த விமானி பிரதீப் கிருஷ்ணனின் இந்தி அறிவிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதீப் கிருஷ்ணனின் இந்தி பேச்சு அங்கிருக்கும் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இண்டிகோ விமானத்தில் விமானியாக இருப்பவர் பிரதீப் கிருஷ்ணன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் விமான பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்கள் எப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் கூட, இவர் விமானத்தில் தமிழில் பேசிய வீடியோ வெளியாகி பல லைக்ஸ்களை அள்ளியது. இந்த நிலையில் தற்போது இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, பிரதீப் கிருஷ்ணனுக்கு இந்தி மொழி பேசத் தெரியாது. எனவே, தற்போது அவர் விமானத்தில் இந்தி பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

பாட்னாவிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் விமானி பிரதீப் கிருஷ்ணன் புரோக்கன் இந்தி பேசியுள்ளார். அவர் பேசுகையில், அனைவருக்குமம் வணக்கம். என் இந்தி உங்கள் எல்லாருக்கும் புரியும் என நம்புகிறேன். இன்று பாட்னாவில் இருந்து புறப்படுகிறோம். 3,000 அடி உயரத்தில் சிறிது நேரம் படபடப்பு இருக்கும். டகடகா டகா என ஆடும். அது சிறிது கடினமாக தான் இருக்கும். நீங்கள் உங்கள் சீட் பெல்ட்டை அணியவில்லை என்றால் டகடகா டகா தான். பீதி அடைய வேண்டாம்என நகைச்சுவையுடன் கூறினார். அவர் சிரமப்பட்டு இந்தி பேசும் வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண்.. காரணம் இதுதான்.. சுவாரஸ்ய கதை!

வைரல் வீடியோ


இவரது வீடியோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ பல லைக்ஸ்களை அள்ளியுள்ளது.  இந்த வீடியோ பதிவிட்ட 2 நாட்களில் கிட்டதட்ட 4.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும்,  இந்த வீடியோவிற்கு 18.8 லட்சம் பேர் லைக்ஸ் அளித்துள்ளனர். அதோடு,  சுமார் 5,00 கமெண்ட்டுகளும் வந்துள்ளது.

Also Read : மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளிய யானை.. பதற வைக்கும் வீடியோ!

அதாவது,  விமானியின் தாய்மொழி அல்லாத மொழியில் பேச முயற்சித்ததற்காக அவரை பலரும் பாராட்டி இருக்கின்றனர்மற்றொரு நபர், “இது ரொம்ப அழகாக இருந்தது. நீங்கள் பேசிய இந்தி எல்லாருக்கும் நன்றாக புரிகிறதுஎன்றார். மேலும், “உங்களது முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை” எனக் கூறினார்.

முன்னதாக, கோவையில் இருந்து சென்னைக்கு பிரதீப் கிருஷ்ணனின் பெற்றோர் அவரது விமானத்திலேயே பயணம் செய்துள்ளனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த பிரதீப் கிருஷ்ணன், தனது அறிவிப்புகளில் இதுபற்றி கூறியிருந்தார். அதாவது, “நான் தான் இந்த விமானத்தின் விமானி என என் தாத்தா, பாட்டி, அம்மாவுக்கு தெரியாது. தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு விமானியின் கனவு. அது நடந்தது நெகிழ்ச்சியான தருணம்என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.