Tamil Nadu Govt’s Free Laptop Scheme: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!

Tamil Nadu Government Budget: தமிழ்நாடு அரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. Acer, Dell, HP போன்ற மூன்று நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. லேப்டாப்பில் குறைந்தபட்சம் 8GB RAM, 256GB SSD போன்ற அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Govts Free Laptop Scheme: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!

இலவச லேப்டாப்

Published: 

16 Jul 2025 20:58 PM

தமிழ்நாடு அரசு (Tamil Nadu Govt) கடந்த 2025 மார்ச் 14ம் தேதி 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் (Tamil Nadu 2025-26 Budget) செய்தது. இதில், தமிழ்நாட்டில் அறிவியல், கலை, என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்தின்படி, ஒவ்வொருவருக்கும் லேப்டாப் வழங்கப்படும் (Laptop Scheme) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

20 லட்சம் மாணவர்கள் இலக்கு:

2025-26ம் ஆண்டிற்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கீட்டில் 2 வருட காலத்திற்கு 20 லட்சம் லேப்டாப் விநியோக்க தமிழ்நாடு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வேண்டுமோ அல்லது டேப்லெட் வேண்டுமா என்பதை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். இருப்பினும், டெண்டர் ஆணவங்கள் தற்போது லேப்டாப்களை மட்டுமே விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.

ALSO READ: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்.. என்னென்ன சேவைக்கு மனு அளிக்கலாம்? முழு விவரம்!

டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம்:

தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் வரும் தமிழ்நாடு மின்னணு கழகம், டெண்டரை அறிவித்துள்ள நிலையில், Acer, Dell, HP ஆகிய 3 நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன. இதையடுத்து, தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப் விலை தொடர்பான தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளி பெறப்படும். டெண்டரில் இப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப் வசதிகள் என்ன..?

8 ஜிபி ரேம், 256 ஜிபி சாலிட் ஸ்டேட் டிரைவ், 128 எம்பி விஆர்ஏஎம் அல்லது அதற்கு மேற்பட்ட கிராபிக்ஸ், 14 அல்லது 15.6 அங்குல காட்சி மற்றும் குறைந்தபட்சம் நான்கு கோர்கள், எட்டு த்ரெட்கள் மற்றும் ஹைப்பர் த்ரெடிங் அம்சத்துடன் இன்டெல் ஐ3 அல்லது ஏஎம்டி ரைசன்3க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட செயலி உள்ளிட்ட உயர் விவரக்குறிப்புகள் கொண்ட மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: ஆகஸ்ட் 25 ஆம் தேதி த.வெ.கவின் இரண்டாவது மாநாடு.. மதுரையில் நடக்கும் என விஜய் அறிவிப்பு.. 

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களையும் இலக்காக கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் இதுவாகும். அதாவது, 4,600க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டப்பட்டநிலையில், அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 366 கல்வி நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளது.