சுட்டெரிக்கும் வெயில்… இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 2025 ஏப்ரல் 25ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்... இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

வெப்பநிலை

Updated On: 

24 Apr 2025 07:17 AM

 IST

சென்னை, ஏப்ரல் 24: தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை (Tamil Nadu Heatwave Alert) 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும் (Tamil Nadu Weather Update) என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்வதற்கு சிரமப்படுகின்றனர். 2025 மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இப்போதே பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

சுட்டெரிக்கும் வெயில்

இன்னும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். சென்னையில் மதிய நேரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, 2025 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.  அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 25ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்


அதே நேரத்தில் தென்தமிழக கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 22.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஏப்ரல் 23ஆம் தேதி வேலூரில் 40.1 டிகிரி செல்சியஸ், திருச்சியல் 39 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 39 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.2 டிகிரி செல்சியஸ், தருமபுரியில் 38 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் 38.5 டிகிரி செல்சியஸ்வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இன்னும் மே மாதத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

 

பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்.... வீடியோ வைரல்
ஆதார் கார்டு நகல்களுக்கு வருகிறது தடை.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
ரயில்களில் இருக்கும் மஞ்சள், வெள்ளைக் கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது