தமிழகத்தில் வெளுக்கும் மழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் மழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

தமிழகத்தில் மழை

Updated On: 

21 Aug 2025 06:18 AM

சென்னை, ஆகஸ்ட் 21 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் எங்கும் மழை பொழிவு இல்லை. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று கூட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. ஆனால், தென்மேற்கு பருவமழையில் தமிழகத்தில் பெரிய அளவு மழை பொழிவு இல்லை.

தமிழகத்தில் வெளுக்கும் மழை

தமிழகத்திற்கு மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை நீடிக்கும். இப்படியான சூழலில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை.. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

சென்னையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெதர்மேன் கொடுத்த அப்டேட்


முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடந்த வாரம் 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

Also Read : குளு குளுவென மாறிய சென்னை.. இரவு முழுவதும் மழை தொடரும் – பிரதீப் ஜான்..

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.8 டிகிரி செல்சியஸ் இருந்தது. இந்தியாவில் 2025 ஆகஸ்ட் மாதத்தில் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான ஒரே இடம் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தான்.

சுற்றுலா பயணிகள் கேரளா, தமிழ்நாடு மலைப்பகுதிகளுககு செல்லது பாதுகாப்பானது. தென் கர்நாடகா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம். குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டாம். மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் 300 முதல் 400 மிமி மழை பதிவாகி உள்ளது. பெங்களூருவில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கேரளாவில் வறண்ட வானிலை நிலவம். கண்ணூர், காசர்கோடு, மத்திய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும்என தெரிவித்தார்.