TN Class 10 HSE+1 Result 2025: மாணவர்களே ரெடியா? வெளியாகும் 10, +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி?

Tamil Nadu Board Class 10 Result 2025: தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 16ஆம் தேதியான இன்று வெளியாகிறது. காலை 9 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வுகளும், பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆன்லைனில் வெளியிடுகிறார்.

TN Class 10 HSE+1 Result 2025: மாணவர்களே ரெடியா? வெளியாகும் 10, +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி?

10,11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Updated On: 

16 May 2025 07:47 AM

 IST

சென்னை, மே 16 : தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (TN SSLC, +1 Result) 2025 மே 16ஆம் தேதியான இன்று வெளியாகிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் நடந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. அதைத் தொடர்ந்து, சிபிஎஸ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தற்போது மாநிலப் பாடத் திட்டத்தின் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிகள் 2025 மே 16ஆம் தேதியான இன்று வெளியாகுகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பகல் 2 மணிக்கு வெளியாகுகிறது. இதனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) வெளிடுகிறார்.

வெளியாகும் 10, +1 பொதுத் தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?

10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். அதாவது, dge.tn.nic.in, tnresults.nic.in  என்ற இணையதளம் மூலம் பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ROLL NUMBER மற்றும் DATE OF BIRTH விவரங்களை உள்ளீட்டு உங்களது தேர்வு முடிவுகளை ஈஸியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, உங்களது ஹால் டிக்கெட் என்ன பிறந்த தேதி குறிப்பிட்டு இருக்கிறீர்களோ அதையை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும், மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தங்களது பொதத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அல்லது மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும்.

மேலும், result.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த டிஜிலாக்கரில் உங்களது விவரங்களை பதிவேற்றுவிட்டு பார்க்கலாம். தனித் தேர்வர்களின் கைப்பேசி எண்ணுக்கு மெசேஜ் மூலம் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அனுப்பும்.

9 லட்சம் பேர் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

2025 மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 9.13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவிகள் 4.40 லட்சம் பேரும், மாணவர்கள் 4.6 லட்சம் பேரும், தனித் தேர்வர்கள் 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் என மொத்தம் 9,13,036 பேர் தேர்வை எழுதியுள்ளனர். அதே நேரத்தில், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 5ஆம் தேதி 27ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 8.23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.