யானைகள், சிறுத்தைகள் மனிதர்களை தாக்குவது இயல்பு தான் – அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சர்ச்சை பேச்சு..

Tamil Nadu Minister Raja Kannappan: ஜூன் 25, 2025 அன்று வெளிநாடு சென்று பயிற்சி பெற்று தமிழகம் திரும்பிய 18 பேரை பாராட்டு வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் யானைகள், சிறுத்தைகள் மனிதர்களை தாக்குவது இயல்பு தான் என பேசியுள்ளார்.

யானைகள், சிறுத்தைகள் மனிதர்களை தாக்குவது இயல்பு தான் - அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சர்ச்சை பேச்சு..

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

Published: 

26 Jun 2025 07:58 AM

 IST

யானைகள், சிறுத்தைகள், புலிகள் மனிதர்களை தாக்குவது இயல்பான ஒரு விஷயம் தான் இதற்காக வனத்துறை தரப்பில் நிவாரணங்கள் வழங்கப்படுவதாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெருவித்திருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த முதுமலை காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானை பாகன்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 18 பேர் தாய்லாந்திருக்க சென்று பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் ஜூன் 25 2025 தேதியான நேற்று தாய்லாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 18 பேரை பாராட்டும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்:

இந்த நிகழ்ச்சி வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹுவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தாய்லாந்தில் இருந்து திரும்பிய 18 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்ச்சியிள் பேசிய அமைச்சர் ராஜா கண்ணப்பன், “ இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் இருந்து பாகன்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடு சென்று பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். அதேபோல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரி குதிரை இல்லை. அதனை கொண்டு வருவதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ” என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான பேச்சு:

தொடர்ந்து பேசிய அவர், “ யானைகள் புலிகள் சிறுத்தைகள் மனிதர்களை தாக்குவது சாதாரணமான ஒன்றுதான். அதற்கான நிவாரணங்களை வனத்துறை தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சி கடித்தாலும் நாய் கடித்தாலும் அதற்கு வனத்துறை தான் நடவடிக்கை எடுக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் இருக்கும் வால்பாறையில் தாயுடன் இருந்த சிறுமியை சிறுத்தை கவ்வி சென்று சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆறு வயது சிறுமி, சிறுத்தை கவ்விச் சென்றதில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை நடமாட்டங்கள் மற்றும் பிற விலங்குகள் மக்களை தாக்குவதில் இருந்து தங்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இந்த கருத்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்