+2 தேர்வு முடிவுகள்… கணினியில் கலக்கிய மாணவர்கள்.. பாடவாரியாக சென்டம் லிஸ்ட்!

Tamil Nadu Class 12th Result 2025 Toppers: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக, கணிணி அறிவியல் பாடத்திட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர்.

+2 தேர்வு முடிவுகள்... கணினியில் கலக்கிய மாணவர்கள்.. பாடவாரியாக சென்டம் லிஸ்ட்!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

Updated On: 

08 May 2025 10:26 AM

சென்னை, மே 08 : 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை (Tamil Nadu Class 12th Result) பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03 சதவீதம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதில், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக, கணிணி அறிவியல் பாடத்திட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர். தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவர்களில், 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 4,05,472 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

மாணவர்க்ள் 3,47,670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு விழுக்காடு 0.47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.94 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71 சதவீதம் தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 98.32 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக, ஈரோடு மாவட்டம் 96.88 சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 95.64 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டம் 95.06 சதவீதமும், கடலூர் மாவட்டம் 94.99 சதவீதமும் பெற்றுள்ளது. மேலும், சென்னையில் 94.44 சதவீதமும், செங்கல்பட்டு 94.29 சதவீதமும், காஞ்சிபுரம் 93.27 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டம் 91.489 சதவீதமும், திருவண்ணாமலை 93.64 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 90.96 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக சென்டம் லிஸ்ட் இதோ

 

 

பாடங்கள் தேர்ச்சி விகிதம் சென்டம் பெற்ற மாணவர்கள்
 தமிழ்  99.15 சதவீதம்  135
இயற்பியல் 99.22 சதவீதம் 1,125
 வேதியியல் 98.99 சதவீதம் 3,181
உயிரியல் 99.15 சதவீதம் 827
கணிதம் 99.16 சதவீதம் 3,022
தாவரவியல் 99.35 சதவீதம் 269
விலங்கியல் 99.51 சதவீதம் 36
கணிணி அறிவியல் 99.73 சதவீதம் 9,536
வணிகவியல் 99.30 சதவீதம் 1,624
கணக்கு பதவியியல் 98.36 சதவீதம் 1,240
பொருளியல் 97.36 சதவீதம் 556
கணினி அறிவியல் 99.78 சதவீதம் 4,208
வணிக கணிதம், புள்ளியியல் 98.78 சதவீதம் 273

பாடவாரியாக  பார்ததால், கணினி அறிவியல் தேர்வில்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகளில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும், குறைந்தபட்சமாக விலங்கியல் தேர்வில் 36 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 2025 ஜூன் 25ஆம் தேதி துணைத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 2024ஆம் ஆண்டில் 7.19 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுளளனர். மேலும், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.