Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வார இறுதி & முகூர்த்த நாளில் சென்னையில் இருந்து கூடுதல் பேருந்து சேவை

Special Buses: 2025 மே 9, 10, 11 தேதிகளில் வார இறுதி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, நாகை உள்ளிட்ட பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

வார இறுதி & முகூர்த்த நாளில் சென்னையில் இருந்து கூடுதல் பேருந்து சேவை
சென்னையியல் இருந்து கூடுதல் பேருந்து சேவை Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 07 May 2025 06:38 AM

தமிழ்நாடு மே 07: வார இறுதி மற்றும் 2025 மே 9ஆம் தேதி முகூர்த்த நாளை (Auspicious Day) முன்னிட்டு, சென்னை (Chennai)  மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து கூடுதல் பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (Tamil Nadu State Transport Corporation) சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு 2025 மே 9ம் தேதி முதல் 2025 மே 11ம் தேதி வரை நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 2025 மே 11ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் பயணிகளுக்காக 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப்பில் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பேருந்து நிலையங்களிலும் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வார இறுதி – முகூர்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோயம்பேட்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, பயணிகள் பெருமளவில் பேருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளதாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதனால், பயணிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில், தீபாவளி மற்றும் பொங்கல் போன்று முக்கிய நாட்களில் மட்டுமின்றி வார இறுதிகள் மற்றும் தொடர் விடுமுறைகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2025 மே 9 முதல் 11 வரை சிறப்பு பேருந்துகள்

போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025 மே 9 (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாளை மற்றும் 10, 11 (சனி, ஞாயிறு) ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ள பயணிகளுக்காக, தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்சி நோக்கி 2025 மே 9 அன்று 650 பேருந்துகள், 2025 மே 10 ஆம் தேதி 665 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு 2025 மே 9 ஆம் தேதி 100 பேருந்துகள் மற்றும் 2025 மே 10 ஆம் தேதி 90 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் காணும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 2025 மே 9 அன்று 24 பேருந்துகள் மற்றும் 2025 மே 10-ஆம் தேதி 100 பேருந்துகள் இயக்கப்படும்.

திரும்பும் பயணத்துக்கான ஏற்பாடுகள்

2025 மே 11 ஆம் தேதி ஞாயிறு அன்று, சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி திரும்பும் பயணிகள் வசதிக்காக, 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவுகளும் பயண ஆலோசனையும்

தற்போது 2025 மே 9ஆம் தேதி 11,841 பயணிகள், 2025 மே 10ஆம் தேதி 7,385 பயணிகள் மற்றும் 2025 மே 11ஆம் தேதி 2025 மே 11,070 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பயணிகள் www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் ஆப்பை பயன்படுத்தி முன்பதிவை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து முக்கியமான பேருந்து நிலையங்களிலும் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!...
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!...
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு..
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு.....
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!
ரசிகர்களிடம் அஜித் எதிர்பார்க்கும் விஷயம்.. சினேகா சொன்ன பதில்!...
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?
இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்?...
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்
பிளஸ் டூ தேர்வு முடிவுகள்! எங்கே காண்பது? முழு விவரம்...
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!
ஜி.வி பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்!...
சூப்பர்ஃபுட் பாகற்காய்.. ஆனால்! இந்த உணவுகளுடன் சாப்பிடாதீர்கள்!
சூப்பர்ஃபுட் பாகற்காய்.. ஆனால்! இந்த உணவுகளுடன் சாப்பிடாதீர்கள்!...
ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!
ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!...
வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் வழங்கும் அசத்தல் எஃப்டி திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் வழங்கும் அசத்தல் எஃப்டி திட்டம்!...
பருத்தி ஆடைகளை நீண்ட காலம் உழைக்க வைக்க என்ன செய்யலாம்..?
பருத்தி ஆடைகளை நீண்ட காலம் உழைக்க வைக்க என்ன செய்யலாம்..?...