எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை… வெயில் கொளுத்துமா?
Tamil Nadu weather: தமிழகத்தில் 2025 மே 7ம் தேதி பல இடங்களில் மழை பெய்துள்ளது. தம்மம்பட்டியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் 41°C, திருத்தணி 20°C வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2025 மே 7 முதல் 13 வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு மே 07: தமிழகத்தில் (Tamilnadu) கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை (Rain Warning) பெய்துள்ளது; தம்மம்பட்டியில் 11 செ.மீ அதிகபட்சமாக பதிவு. வெப்பநிலை வேலூரில் 41°C ஆகவும், திருத்தணியில் 20°C ஆகவும் காணப்பட்டது. சமவெளியில் 36-41°C, கடலோரம் 34-36°C, மலைப்பகுதிகளில் 22-28°C உள்ளது. 07-05-2025 முதல் 13-05-2025 வரை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம். 10-11ம் தேதிகளில் வெப்பநிலை 2-3°C அதிகரிக்கலாம். சென்னை (Chennai) மற்றும் புறநகரில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள்மாவட்டங்களில் பல இடங்களில், கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணி (8 செ.மீ), திருப்புவனம், பள்ளிப்பட்டு, சின்னக்கல்லார் உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ வரை மழை பெய்துள்ளது. மேலும், விழுப்புரம், திருப்பூர், மதுரை, விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 1 முதல் 6 செ.மீ வரையிலான மழை பதிவுகள் உள்ளன.
வெப்பநிலை நிலவரம்: வெயிலின் தாக்கம் சில இடங்களில் அதிகம்
வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை 41.0° செல்சியஸ் ஆகவும், திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.0° செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. சில இடங்களில் கடந்த நாளைவிட 2-3° செல்சியஸ் உயர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் 36-41° செல்சியஸ், கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-28° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மழை மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு
தென்னிந்தியாவை தாக்கும் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் நிலையில், 2025 மே 13ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
07-05-2025: தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை ஏற்படலாம்.
08-05-2025 மற்றும் 09-05-2025: ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் 30-40 கிமீ வேக காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
10-05-2025 முதல் 13-05-2025 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
07-05-2025 முதல் 09-05-2025: தமிழகத்தில் வெப்பநிலை பெரிதும் மாற வாய்ப்பு இல்லை. 10-05-2025 மற்றும் 11-05-2025: வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் உயரக்கூடும். 07 மற்றும் 08 மே தேதிகளில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
இன்று (07-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸும், குறைந்தபட்சம் 26-27° செல்சியஸும் இருக்கும்.
நாளை (08-05-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். வெப்பநிலை முந்தைய நாளைப் போலவே இருக்கும்.