Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

CSKvKKR : பிரேவிஸ் அதிரடி – கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி!

CSKvKKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மே 7, 2025 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

CSKvKKR :   பிரேவிஸ் அதிரடி – கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி!
CSKvKKR
karthikeyan-s
Karthikeyan S | Published: 08 May 2025 00:09 AM

ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து  180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய சென்னை 8 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் சார்பாக அதிகபட்சமாக  பிரேவிஸ் 52 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி சார்பாக வைபவ் அரோரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சென்னைக்கு மோசமான துவக்கம்

இதன் ஒரு பகுதியாக 189 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆயுஷ் மாத்தூர் மற்றும் டெவோன் கான்வே ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மாற்று வீரராக களமிறங்கிய ஊர்வில் படேல், தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அது வெகு நேரம் நீடிக்க வில்லை. ஊர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷித் ராணா பந்தில் அவுட்டானார். அதனைத் தொடர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை 8 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும் வெளியேறினர். ஒரு கட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடியது.

ஆறாவது விக்கெட்டுக்கு டெவால்ட் பிரெவிஸ் மற்றும் சிவம் துபே இடையேயான பார்ட்னர்ஷிப் சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டது. பிரெவிஸ் சீரான இடைவேளைகளில் பவுண்டரிகளை விலாசினார். வைபவ் அரோராவின் ஒரு ஓவரில் பிரெவிஸ் தலா மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என  30 ரன்கள் எடுத்து அசத்தினார்.  இதனையடுத்து பிரெவிஸ் வெறும் 22 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.  பிரெவிஸ் மற்றும் துபே இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை அளித்த ஃபினிஷர் தோனி

மற்றொரு பக்கம் சென்னை அணிக்கு நிதானமாக ரன்களை சேர்ந்த துபே 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த  19வது ஓவரில் வைபவ் அரோரா பந்து வீச்சில் அவுட்டானார். அதே ஓவரில் நூர் அகமதுவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசியாக தான் வந்தார் விநாயக் என்பது மாதிரி கடைசி கட்டத்தில் எம்.எஸ். தோனி  கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சென்னையின் பக்கம் திருப்பினார். பின்னர் மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார்.  மறுபக்கம் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து, சென்னை அணிக்காக அன்ஷுல் காம்போஜ் வெற்றி தேடிதந்தார். இந்த தோல்வியுடன், கொல்கத்தாவின் பிளேஆஃப் நம்பிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

ஓடிடியில் வெளியானது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம்...
ஓடிடியில் வெளியானது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம்......
கண்ணீர் வேண்டாம் தம்பி!.. மாற்றுத்திறனாளி மாணவனின் கோரிக்கையை
கண்ணீர் வேண்டாம் தம்பி!.. மாற்றுத்திறனாளி மாணவனின் கோரிக்கையை...
இரவு நேரங்களில் ஏன் மாம்பழம் சாப்பிடக்கூடாது..? பிரச்சனையை தரும்!
இரவு நேரங்களில் ஏன் மாம்பழம் சாப்பிடக்கூடாது..? பிரச்சனையை தரும்!...
விஜய் பட காமெடி நடிகர் இறந்துவிட்டதாக வைரலான செய்தி...
விஜய் பட காமெடி நடிகர் இறந்துவிட்டதாக வைரலான செய்தி......
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!...
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!...
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?...
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி...
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....