MS Dhoni Retirement: மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..! ரசிகர்களுக்கு சுவாரஸ்ய பதில்!
Chennai Super Kings: ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்திய போதிலும், தோனியின் ஓய்வு குறித்த கேள்விகள் எழுந்தன. தோனி தனது 42 வயது மற்றும் உடல்நிலை காரணமாக எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் பயணம் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை அணிக்கு, 18வது சீசன் தொடக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதனை தொடர்ந்து, எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாக திரும்பிய பிறகு சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஐபிஎல் 2025 சீசனில் பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிய சென்னை அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியில் கடைசி நேரத்தில் தோனி (MS Dhoni) அடித்த சிக்ஸூம் முக்கியமானது. சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, அவரது ஓய்வு குறித்த கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது. அதற்கு தோனி அளித்த ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது.
ஓய்வு குறித்து தோனி என்ன சொன்னார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று அதாவது 2025 மே 7ம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் 180 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் 2025 சீசனில் சென்னை அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். நேற்றைய போட்டிக்கு பிறகு தோனியின் ஓய்வு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டென முகம் மாறி மீண்டும் புன்னகை படி பதிலளித்த தோனி, “ எனக்கு 42 வயது என்பதை மறந்துவிடாதீர்கள். நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். ரசிகர்களில் பலருக்கு எனது ஓய்வு எப்போது என்று தெரியவில்லை. அதனால்தான் ரசிகர்கள் நான் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். இந்த ஐபிஎல் முடிந்ததும், என் உடல் இவ்வளவு அழுத்தத்தைத் தாங்குமா என்பதைக் கண்டறிய அடுத்த 6-8 மாதங்களுக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நான் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சில விஷயங்கள் இந்த ஆண்டு நமக்கு சிறப்பானதாக அமையவில்லை. இப்போது 25 வீரர்கள் எங்கு பொருந்தலாம் என்பதில் கசனம் செலுத்தப்படுகிறது. நாங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்புகிறோம். ஆனால், எந்த பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் எங்கு பொருந்துகிறார்கள் என்பதை கண்டறியவே நேரம் எடுத்தது. சூழ்நிலை மற்றும் மற்ற அனைத்தையும் பொறுத்தது. நாங்கள் தொடங்கியபோது, யாராலும் பெரியளவில் ரன்கள் எடுக்க முடியவில்லை.” என்று தெரிவித்தார்.
காயத்தால் அவதிப்படும் தோனி:
ஐபிஎல் 2023க்கு பிறகு எம்.எஸ்.தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு, கடந்த 2 சீசன்களாக தோனி உடற்தகுதி பிரச்சனைகளால் போராடி வருகிறார். இதன் காரணமாகவே, தோனி பேடிங் திறன் குறைவாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் கீழ் வரிசையில் பேட்டிங் செய்கிறார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டி 2025 மே 12ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும், கடைசி போட்டி மே 2025 18ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் நடைபெறும். பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணி சிஎஸ்கே ஆகும்.