Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : அந்த மனசு தான் சார் கடவுள்… ரெட்ரோ படத்தின் லாபத்தை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!

Retro Film Crew Charity : நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா முன்னணி நாயகனாக நடித்திருந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி, வசூலில் இதுவரை சுமார் ரூ. 104 கோடிகளைக் கடந்தது. அதில் ஒரு பங்காகப் படக்குழு அகரம் அறக்கட்டளைக்கு ஒரு பெரிய தொகையை வழங்கியுள்ளது.

Suriya : அந்த மனசு தான் சார் கடவுள்… ரெட்ரோ படத்தின் லாபத்தை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!
சூர்யாவின் ரெட்ரோ படக்குழுImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 May 2025 22:34 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் முன்னணி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்நிலையில் இந்த படமானது வெளியாகி சுமார் ஒரு வாரமான நிலையில், இதுவரை சுமார் ரூ. 108 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை ரெட்ரோ படக்குழு அகரம் பவுண்டேஷனுக்கு (Agaram Foundation) வழங்கியுள்ளது. நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனுக்கு  ரெட்ரோ படக்குழு இணைந்து ரூ. 10 கோடியை டொனேஷனாக வழங்கியிருக்கிறது.

தற்போது இந்த தகவலானது வெளியாகி பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா வசதி குறைவால் படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு தனது அகரம் ஃபவுண்டேசன் மூலமாக அவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். பல்வேறு நபர்களிடம் இருந்து நிதிகளைத் திரட்டி மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்கிவருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் ரெட்ரோ படக்குழுவும் இணைந்து, இந்த அகரம் பவுண்டேஷனுக்கு ரூ 10 கோடி நிதி வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம் :

நடிகர் சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகர் படத்தில் மட்டும் மக்களுக்கு உதவி செய்வாராக இருக்கக்கூடாது. நிஜத்திலும் முடியாத மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதை நடிகர் சூர்யா நிரூபித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ திரைப்படம் :

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் வெளியான படம் ரெட்ரோ. இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷனில் இந்த படம் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என்றே கூறலாம்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் சுமார் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இவரின் பின்னணி இசையும் சரி இந்த படத்தில் மிகவும் அருமையாக இருந்தது. இந்த படமானது வெளியாகி சுமார் ஒரு வாரமான நிலையில், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை...
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா.....
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்...
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்......
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...