Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!

Biopics In Tamil Cinema: தமிழ் சினிமாவில் பல ஜானர்களில் படம் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என பல தமிழ் சினிமாவில் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற வாழ்க்கை வரலாற்று படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 May 2025 15:16 PM

சூரரைப் போற்று: கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது சூரரைப் போற்று படம். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா (Actor Suriya) நடிக்க நாயகியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி (Actress Aparna Balamurali) நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பரேஷ் ராவல், மோகன் பாபு, ஊர்வசி, பூ ராமு, கருணாஸ், கிருஷ்ணகுமார், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பிரபல ஏர் டெக்கான் என்ற  வானூர்தி நிறுவனத்தைத் துவக்கிய கோ.ரா.கோபிநாத்த்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை  இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். பொதுவாகவே இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகும் படங்களில் பெண்களின் கதாப்பாத்திரம் மிகவும் வலிமையானதாக கட்சிப்படுத்தப்படும்.

அந்த வகையில் சூரரைப் போற்று படத்திற்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று படத்திலும் நடிகை ரித்திகா சிங்கின் கதாப்பாத்திரத்தை மிகவும் வலிமையானதாக இயக்குநர் சுதா கொங்கரா காட்சிப் படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சூரரைப் போற்று படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரமும்  வலுவானதாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கோ.ரா.கோபிநாத்த்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தாலும் சினிமாவிற்கு ஏற்ப சில மாஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த காட்சிகள் ரசிகர்களுக்காக உருவாக்கி இருந்தாலும் படத்தின் போக்கை எந்த விதத்திலும் அது பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

அமரன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் நாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.

இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் முதுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஷ் கதாப்பாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானதால் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாறாக முகுந்த் வரதராஜானுக்கும் அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஷ் இடையே உள்ள காதலைதான் இந்தப் படம் அதிகமாக காட்சிப்படுத்தி இருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... மாத சம்பளம் ரூ.1.12 லட்சம் வரை!...
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்!...
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?...
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! - பிரதமர் மோடி...
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை...
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா.....
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்...
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்......
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...