Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara : காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!

Accident During Kantara Shooting : கன்னட மொழியில் உருவாகிவரும் பான் உந்திய திரைப்படம் காந்தார சாப்டர் 1. இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி. இவரின் முன்னணி இயக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kantara  : காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!
காந்தாரா சாப்டர் 1 ஷூட்டிங்கில் மரணம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 May 2025 20:32 PM

கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி உலகளாவிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் காந்தாரா (Kantara) . இந்த படத்தைப் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) இயக்கி அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது கர்நாடகாவைச் சேர்ந்த தெய்வத்தின்  கதையை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2022ம் ஆண்டு கன்னட மொழி மட்டுமில்லாமல் பான் இந்தியா அளவிற்கு இந்த படமானது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அனைத்து மொழிகளிலும் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் பாகம் இரண்டாக காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) படமான மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்திலும் ரிஷப் ஷெட்டி முன்னணி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவில் (Karnataka) தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று 2025, மே 7ம் தேதியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஆற்றுப் பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து வந்தது.

காந்தாரா ஷூட்டிங்கில் ஜூனியர் ஆர்டிஸ் மரணம் :

இந்நிலையில் கொல்லூரியில் உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குளிக்கச் சென்ற இளம் நடிகர் கபில் என்பவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயமானது படக்குழுவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் :

நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு முதல் தொடங்கியது. இந்த படத்தில் மேலும் மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய ரோலில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

காந்தாரா திரைப்படமானது கர்நாடகாவின் தெய்வமான பஞ்சுரலியின் கதைக்களம் கொண்டு உருவாகிவருகிறது. இந்த காந்தாரா படத்தின் பாகம் 1ல் இந்த தெய்வத்தைக் குறித்த காட்சிகள் மட்டுமே இடம் பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து உருவாகிவரும் இந்த காந்தார சாப்டர் 1 படத்தில் முழுமையாக அந்த பஞ்சுரளி தெய்வத்தின் கதைக்களம் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் நடிகர் ரிஷப் ஷெட்டி உடன், ஜெயராம், கிஷோர், ஜெயசூர்யா, ஜிஷு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை ஹோம்ப்ளே பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது, முதல் பாகத்தை ஒப்பிடும்போது பாகம் 2 மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் சிறப்பாகத் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!
விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!...
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!...
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்.....
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!...
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!...
மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை
மாமன் படத்திற்கு மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை...
ஸ்மார்ட் வாட்ச் வாங்கப்போறீங்களா? முக்கியமாக கவனிக்க வேண்டியவை!
ஸ்மார்ட் வாட்ச் வாங்கப்போறீங்களா? முக்கியமாக கவனிக்க வேண்டியவை!...
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு!
விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் உயிரிழப்பு!...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ் - புதிய அப்டேட்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டைலில் நெட்ஃபிளிக்ஸ் - புதிய அப்டேட்...
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி!
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி!...
சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!
சூர்யா 45 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!...