Lokesh Kanagaraj : இயக்குநராக இருந்து படத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்.. இயக்குநர் யார் தெரியுமா?
Director Lokesh Kanagaraj Actor Debut : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இயக்குநராகப் பிரபலமான இவர் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கவுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் கூலி (Coolie). இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பென்ஸ் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சில படங்களை இயக்கியிருந்தாலும் மரணமாஸாகப் படங்கள் இருக்கும். அதை தொடர்ந்து இயக்குநராகக் கலக்கிவந்த இவர் ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் (Captain Miller) படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran)இயக்கவுள்ளாராம். இந்த படமும் மிகவும் வித்தியாசமாக கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்தன அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இனிமேல் என்ற பாடலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி இருப்பதைக் கூறப்படுகிறது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் ராக்கி, கேப்டன் மில்லர் மற்றும் சாணி காகிதம் என மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக்கை திரைப்படமாக உருவாக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இவரின் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஹீரோவாக அறிமுகமாக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் புதிய படங்கள் ;
இயக்குநர் லோகேஷ் ககனகராஜின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் லியோ. விஜய்யின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணியில் இருந்து வருகிறது.
மேலும் இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் ரஜினியுடன் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படமானது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.