GV Prakash And Kayadu Lohar : எதிர்பாராத காம்போ… ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக கயாடு லோஹர்!
Kayadu Lohar And G.V. Prakash Combo : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கிங்ஸ்டன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் நிலையில், தற்போது இவரின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளாராம்.

தமிழில் டிராகன் (Dragon) படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar). இந்த பிரபலத்தை தொடர்ந்து தமிழில் மட்டுமே இரு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவை நடிகர் அதர்வாவின் நடிப்பில் உருவாகிவரும் இதயம் முரளி (Idhyam Murali) படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அதே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிவரும் STR 49 படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் கதாநாயகியாக அறிமுகமான 3வது திரைப்படத்தில் சிலம்பரசனுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் நான்காவது படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar) முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தை AK என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அருண் குமார் தனசேகரன் தயாரிக்கவுள்ளார். தற்போது இந்த தகவல் குறித்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வரும் 2025, மே 9ம் தேதியில் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஹ்ஸ் – கயாடு லோஹரின் கூட்டணி :
#GVPrakash & #KayaduLohar are joining together for a mystery film 🎬♥️
Produced by AK Entertainment !!
First look releasing on this Friday 💫 pic.twitter.com/3qZiNoMx9C— AmuthaBharathi (@CinemaWithAB) May 7, 2025
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் கிங்ஸ்டன் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இடி முழக்கம், ப்ளாக்மெயில் மற்றும் மெண்டல் மனதில் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மெண்டல் மனதில். இந்த படத்தில் நடிகர் ஜி. வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படங்களை தொடர்ந்துதான் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இந்த படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இது இவரின் நடிப்பில் உருவாகும் 4வது தமிழ் படமாகும். இந்த படத்தின் முதல் பார்வை வரும் 2025, மே 9ம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் கதைக்களமானாது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம் . இந்த படமானது மர்ம க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இனியவை இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.