ஆபரேஷன் சிந்தூர்… டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்… உற்று பார்த்த பாகிஸ்தான்!
Operation Sindoor : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது இருநாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகப்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அமெரிக்கா, மே 08 : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் (India Pakistan Tension) பதற்றம் நிலவி வரும் நிலையில், தன்னால் எதாவது உதவ முடிந்தால் அதனை செய்யவும் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார். மேலும், இருநாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டு, சரி செய்து கொள்வதை தான் பார்க்க விரும்புவாக கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் (Pahalgam Terror Attack) பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.
இந்தியா பாகிஸ்தான் பதற்றம்
பயங்கரவாதிகள் மட்டுமில்லாமல், அவர்களுக்கு உதவியவர்களையும் கண்டறிந்து பதிலடி கொடுப்போகும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார். இதனால், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்பது உறுதியாகி விட்டது. இதற்கான நடவடிக்கையிலும் இந்தியா தீவிரமாக இருந்தது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வார்ரூமில் இருந்துக் கொண்ட அனைத்து நடவடிக்கையை எடுத்தார். மேலும், தொடர்ந்து கண்காணிப்பையும் மேற்கொண்டார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியா 2025 மே 7ஆம் தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டம். இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்வூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், கோட்லி, முசாபராபாத் உள்ளிட்ட 9 இடங்களில் தாக்குதல் நடந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன முக்கிய விஷயம்
President Trump on India and Pakistan from the @WhiteHouse…
“I get along with both, I know both very well, and I wanna see them work it out. I wanna see them stop…they’ve gone tit-for-tat, so hopefully they can stop now. IF I CAN DO ANYTHING TO HELP, I WILL BE THERE.” @POTUS pic.twitter.com/zxbjeayrAm
— Dan Scavino (@Scavino47) May 7, 2025
பஹவல்பூர் முரிட்கே முக்கிய இடங்களாகும். இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தெரிகிறது. 1971ஆம் ஆண்டு பிறகு பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தனது ஆழமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மேலும், பல்வேறு நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ” இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளையும் நன்றாக தெரியும். இருநாடுகளும் தாக்குதலை நிறுத்திவிடுவார்கள் என நம்புகிறேன். அவர்கள் தாக்குதல் நிறுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது.
இரு நாடுகளுடன் நாங்கள் நல்ல உறவில் இருக்கிறோம். தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர நான் ஏதாவது உதவி செய்ய முடிந்தால் செய்வேன்” என பேசியுள்ளார். முன்னதாக பேசிய டிரம்ப், ”நாங்கள் ஓவல் (அலுவலகம்) கதவுகளில் நடந்து செல்லும்போது இந்தியா தாக்குதல் குறித்து அறிந்தோம். “அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மிக விரைவாக இந்தியா பாகிஸ்தான் பிரச்னை முடிவுக்கு வரும்” என்று கூறினார். டிரம்ப் உதவியாக செய்வதாக கூறிய நிலையில், பாகிஸ்தான் இதுகுறித்து டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.