பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி? வீடியோ வெளியிட்ட ராணுவம்!
Operation Sindoor : ஆபேரஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடந்தது? பயங்கரவாதிகள் முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பதற்கான வீடியோ ஆதாரங்களை ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். அதில், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கே பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்ட வீடியோ இடம்பெற்று இருக்கிறது.

காஷ்மீர், மே 07 : காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவத்தினர் அழித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இதற்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளது.
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி?
ஆனால், இதற்கு பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இந்தியா, 2025 மே 7ஆம் தேதியான இன்று நள்ளிரவு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
கிட்டதட்டட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் எப்படி பயங்கரவாதிகள் முகாம்கள் தகர்க்கப்பட்டன. எவ்வளவு நேரம் ஆனது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது, மே 7 ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதோது, பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்ட வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது எப்படி?
#WATCH | Delhi | #OperationSindoor| Col. Sofiya Qureshi, while addressing the media, presents videos showing destroyed terror camps, including Mehmoona Joya camp, Sialkot, which lies 12-18 km inside Pakistan.
It\’s one of the biggest camps of Hizbul Mujahideen. It is one of the… pic.twitter.com/g44j5c1NeH
— ANI (@ANI) May 7, 2025
பாகிஸ்தானுக்குள் 6 கி.மீ தொலைவில் உள்ள சர்ஜால் முகாம், சியால்கோட் உட்பட அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை காட்டும் வீடியோ வெளியாகி வருகிறது. மேலும், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி பயிற்சி பெற்ற முரிட்கே பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத தளமான மர்காஸ் சுபன் அல்லா, ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமும் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.