நடிகர் அதர்வாவின் பிறந்த நாள்… வைரலாகும் சுதா கொங்கரா போஸ்ட்
Actor Atharvaa Murali: நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், இமைக்கா நொடிகள், பூமராங், 100, குறுதி ஆட்டம், நிறங்கள் மூன்று மற்றும் பட்டத்து அரசன் என பல ஹிட் படங்களில் நடித்தார். இது ரசிகர்களிடையே இவருக்கு என தனி இடத்தை கொடுத்தது.

மறைந்த நடிகர் முரளியில் மூத்த மகன் தான் நடிகர் அதர்வா முரளி (Atharvaa Murali). இவர் மே மாதம் 1989-ம் ஆண்டு பிறந்தார். எஞ்சினியரிங் படிப்பை முடித்த இவர் சினிமாவில் நாயகனாக வேண்டும் என்ற ஆசையில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2010-ம் ஆண்டு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கிய பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் அதர்வா முரளி. இந்தப் படத்தில் பள்ளி மாணவராக நடித்திருந்தார். இதில் நடிகை சமந்தா நாயகியாக நடிதிருந்தார். தமிழில் இவர் நாயகியாக அறிமுகம் ஆன படமும் இதுதான். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து பல இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார் அதர்வா முரளி.
இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் 2024-ம் ஆண்டு இறுதியாக வெளியான படம் நிறங்கள் மூன்று படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் 5 படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு முக்கிய படங்களில் அதர்வா நடித்து வருகிறார்.
அதில் ஒன்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். மற்றொன்று அதர்வா நாயகனாக நடிக்கும் படம் இதயம் முரளி. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பும் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பதிவு:
Happy birthday @Atharvaamurali ! Here’s to wishing you the happiest ever kid! Still remember you as the kid I first met on Paradesi!!! And to now be directing you❤️ #Parasakthi #TeamParasakthi
Video courtesy @dop007 pic.twitter.com/5uKlIn7oF6
— Sudha Kongara (@Sudha_Kongara) May 7, 2025
இந்த இரண்டு படங்களையும் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்ஷர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்ட பதிவு:
Here’s wishing our Idhayam Murali, @Atharvaamurali , a very happy birthday❤️#IdhayamMurali pic.twitter.com/PArttIeuW4
— DawnPictures (@DawnPicturesOff) May 7, 2025
அதே போல இதயம் முரளி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதயம் முரளி படத்தின் போஸ்டர் உடன் ஒரு பதிவை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு நடிகர் அதர்வா முரளிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.