Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நள்ளிரவில் பயங்கரம்… மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற கணவன்… நடந்தது என்ன?

Chennai Crime News : சென்னை திருவொற்றியூரில் குடும்ப தகராறில் மனைவியை, கணவர் கொலை செய்துள்ளார். மதுவுக்கு அடிமையான கணவன், மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதி நள்ளிரவில் மனைவியை கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

நள்ளிரவில் பயங்கரம்… மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற கணவன்… நடந்தது என்ன?
மாதிரிப்படம்Image Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Published: 08 May 2025 06:40 AM

சென்னை, மே 08 : சென்னை திருவொற்றியூரில் குடும்ப தகராறில் மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தர் ரகு (40). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (35). இவர்களுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மதுவுக்கு அடிமையான ரகு, தினமும் மது குடித்துவிட்டு, மனைவி ரேவதியிடம் சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

சென்னையில் பயங்கரம்

இதனால், ரேவதி கடந்த ஒரு வாரமாக தனத தாய் வீட்டிற்கு வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதி மாலை ரகு சமாதானம் செய்து ரேவதியை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இரவு முழுவதும் இருவருக்கும் இடையே தகராறு நீடித்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 1 மணியளவில் ஆத்திரத்தில் ரேவதியை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். ரேவதியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே வீட்டிற்கு வந்துள்ளது. அப்போது, கதவு உள்பக்கம் தாழிட்டி இருந்தது. அக்கம் பக்கத்தினர் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து கதவை திறந்தபோது, ரேவதி கத்தியால் குத்தப்பட்டு ரத்து வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அதே நேரத்தில், ரகுவும் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அக்கம் பக்கத்தினர் உடனே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேவதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், கழுத்தை அறுத்துக் கொண்ட ரகுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ரகு மது போதையில் அடிமையானவர்கள் என்றும் இதனால், தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். மேலும், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  அண்மையில் கூட,  தஞ்சாவூரில் பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பாஜக பெண் பிரமுகரை, வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 5 பேர் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமி.. லட்சுமி தேவியை இப்படி வழிபட்டால் புண்ணியம்!
சித்ரா பௌர்ணமி.. லட்சுமி தேவியை இப்படி வழிபட்டால் புண்ணியம்!...
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!...
சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இத
சமந்தா தயாரிப்பில் உருவான சுபம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இத...
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்
ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்...
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!
பாகிஸ்தானுடன் எல்லை மோதல் தீவிரம்: வீரர் முரளி நாயக் வீர மரணம்!...
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?
ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் என்ன?...
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?
ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?...
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்..
1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.....
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது
மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது...
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!
ஏடிஎம் மையங்கள் 3 நாட்கள் செயல்படாதா? - அரசு சொன்ன முக்கிய தகவல்!...