மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த ஜெயிலர் பட நடிகர் விநாயகன் கைது
Jailer Movie Villain Vinayagan: ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன். கேரளாவில் ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது தங்கியிருந்த ஒரு ஹோட்டலுக்கு வெளியே குடிபோதையில் அவர் கலவரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக நடிகர் விநாயகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் சிறப்பு கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் விநாயகன் (Actor Vinayagan) படங்களில் நடிப்பதால் மட்டும் பிரலமடையாமல் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். மலையாளத்தில் 1995-ம் ஆண்டு வெளியான மாந்த்ரிகம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் விநாயகன். அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு வரை தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகர் விநாயகன் 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இயக்குநர் இயக்குநர் தருண் கோபி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படம் திமிரு. இந்தப் படத்தில் வில்லியாக நடிகை ஸ்ரீயா ரெட்டி நடித்திருந்தார். அவருடன் இருக்கும் அடியாளாகா நடிகர் விநாயகன் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் விநாயகன் நொண்டி காலுடன் ஓடி வந்து ஸ்ரீயா ரெட்டியிடம் அக்கா மாமா வந்துட்டாரு என விஷாலை கூறும் வசனங்கள் தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் விநாயகன்.
இவர் தமிழில் வெளியான காளை, எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், மதுரை சம்பவம், சிறுத்தை, மரியான் மற்றும் ஜெயிலர் படங்கள் ரசிகர்கள் மனதில் இவரது நடிப்பை பதியவைத்தது. தமிழில் இவர் இறுதியாக நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
மிரட்டும் வில்லனாக படத்தில் தோன்றி நடிகை ஐஸ்வர்யா ராயின் பாடலுக்கு நடனமாடுவதும், மலையாளம் கலந்த தமிழில் மிரட்டுவதுமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விநாயகன். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் இவர் படங்களில் நடிப்பதால் மட்டுமே செய்திகளிலி இடம்பெறாமல் பல சர்ச்சைகளிலும் சிக்கியும் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கிறார். முன்னதாக விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் குடி போதையில் நடிகர் விநாயகன் ரகளை செய்ததாக கூறி அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பிற்காக சென்ற விநாயகன் அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது குடி போதையில் அந்த ஹோட்டலுக்கு வெளியே ரகளையில் ஈடுபட்டதாக கூறி அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் குடி போதையில் ரகளை செய்த வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.