Ravi Mohan: தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!
Ravi Mohan And Kenisha Francis : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இன்று தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷின் திருமணம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. அந்த திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் உடன் கலந்துகொண்டுள்ளார்.

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது கராத்தே பாபு, ஜீனி, பராசக்தி (Karate Babu, Genie, Parasakthi) மற்றும் தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவருகிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் பராசக்தி (Parasakthi) . இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். இவர் தனியாக ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று 2025, மே 9ம் தேதி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் (Isari K Ganesh) மகள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தனது தோழியாக எனக் கூறப்படும் கெனிஷா பிரான்சிஸ் (Kenisha Francis) உடன் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். அதுவும் நடிகர் ரவி மோகனும், கெனிஷாவும் ஒரே நிற உடையில் அந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த விஷயமானது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனரா என்று கிசு கிசுகபட்டு வருகிறது. இந்நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் ரவி மோகன் – கெனிஷா பிரான்சிஸ் புகைப்படம் :
“Celebrating love at #PreethaaGanesh & #LushvinKumar‘s wedding! Ravi Mohan & Kenishaa Francis shine at the grand #VelsWedding! 💍✨
#RaviMohan #KenishaaFrancis #IshariGanesh #TamilCinema #WeddingVibes” pic.twitter.com/DFj9wHnldL
— TamilCineX (@TamilCineX) May 9, 2025
வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேசனின் மகள், ப்ரீத்தா கணேஷின் திருமணம் வெகு சிறப்பாக நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ரவி மோகன், விக்ரம் பிரபு, அதிதி சங்கர், பிரபு மற்றும் பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இயக்குநர்கள் மணி ரத்னம், மாரி செல்வராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன் என இயக்குநர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குறிப்பாக நடிகர் ரவி மோகனின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
ரவி மோகனின் வீடியோ :
#RaviMohan pic.twitter.com/INWsthMwNT
— Prathap (@KindHeartGuy) May 9, 2025
நடிகர் ரவி மோகன் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரவி மோகன் தனது தோழி என்று கூரப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் ஒன்றாகத் திருமணத்தில் கலந்துகொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்த நிலையில், அது உறுதியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பான கிசு கிசுக்கள் ஆரம்பத்திலே வெளியாகிவந்த நிலையில், இருவரும் தங்கள் நண்பர்கள் எனத் தெளிவு படுத்தினர். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாகக் கைகோர்த்து வந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.