SJ Suryah: ரஜினியுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. என்ன படம் தெரியுமா?
Jailer 2 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் எஸ்ஜே சூர்யா மற்றும் யோகி பாபு இருப்பது உறுதியாகும் வகையில் புகைப்படம் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் வேட்டையன் (Vettaiyan). இந்த படத்தை சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie) திரைப்படத்தில் இணைந்தார் ரஜினிகாந்த். இந்த படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 172வது திரைப்படமாக உருவாகிவருவது ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படமும் எதிர்பாராத வகையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வருகின்றனர் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படத்தின் மூலம் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகி பாபு இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
Muthuvel Pandian’s hunt begins!💥 #Jailer2 shoot starts today🌟@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/v72a7wXpDH
— Sun Pictures (@sunpictures) March 10, 2025
நடிகர் ரஜினிகாந்தின் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இதற்கு முன் நடித்திருந்த கூலி படத்தையும், சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக , முதல் பாகத்தைப் போல ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். மேலும் நடிகை மிர்னா மேனனும் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த ஜெயிலர் 2 படமானது பாகம் 1ன் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளது என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூரியா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திலும் நடிகர் மோகன் லால் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமானது முதல் பாகத்தை ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டை உருவாக்கவுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத்தான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையின் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியா பாகிஸ்தானை இடையே போர் நிலவி வரும் நிலையில், வட இந்தியாவில் நடக்கவிருந்த ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.