Isari K Ganesh: ஐசரி கே. கணேஷ் மகளின் திருமணம்.. ஒன்று திரண்ட கோலிவுட் பிரபலங்கள்!
Isari k Ganesh Daughter Wedding : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல். இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவர் ஐசரி கணேஷ். இவரின் மகளின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடந்த நிலையில், அந்த திருமணத்தில் தமிழ் பிரபல நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை பலரும் கலந்துகொண்டனர். அது குறித்துப் பார்க்கலாம் .

கோலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் (Vels Films International) . இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருபவர் தயாரிப்பாளரும், வேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஐசரி K.கணேஷ் (Producer Isari K. Ganesh) . இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக நடிகர் தனுஷின்(Dhanush) டி56 படமானது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு முன் மற்றொரு படத்தையும் தனுஷை வைத்து உருவாகவுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று 2025, மே 9ம் தேதியில் அவரின் மகள் பிரீதா கணேஷின் திருமணம் (wedding) வெகு விமர்சையாக நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் பிரபலங்கள் (Tamil Celebrities) பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், ரவி மோகன், சூர்யா, விக்ரம் பிரபு, பிரபு என பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் வெற்றிமாறன் என இயக்குநர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த திருமணத்தில் நடிகர் ரவி மோகனின் பேச்சுதான் அதிகம் எழுத்து வருகிறது. அவர் தனது தோழியுடன் ஒரே நிற உடையில் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விஷயமானது இணையத்தில் தீயாகி பரவி வருகிறது. இந்த புகைப்படங்களும் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் :
#IshariGanesh‘s daughter #Preethaa Wedding 💒💍 #RaviMohan – #Manirathnam – Aditi Shankar pic.twitter.com/u6VnnmuQen
— Movie Tamil (@MovieTamil4) May 9, 2025
இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். தயாரிப்பாளர் வீடு திருமணம் என்றாலே சொல்லவே வேண்டாம், மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த திருமணத்தில் தமிழ் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் – பாடகி கெனிஷா பிரான்ஸிஸ் புகைப்படம் :
“Celebrating love at #PreethaaGanesh & #LushvinKumar‘s wedding! Ravi Mohan & Kenishaa Francis shine at the grand #VelsWedding! 💍✨
#RaviMohan #KenishaaFrancis #IshariGanesh #TamilCinema #WeddingVibes” pic.twitter.com/DFj9wHnldL
— TamilCineX (@TamilCineX) May 9, 2025
நடிகர் ரவி மோகனுக்கும் அவரின் மனைவி ஆர்த்தி ரவிக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனும், அவரின் தோழியான கெனிஷாவும் காதலித்து வருவதாகவும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரபல பாடகி கெனிஷா “தங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு இவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்துள்ளனர். இந்த விஷயமானது மீண்டும் கிசுகிசுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.