Vijay Deverakonda: நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
Vijay Deverakonda Admits To Being In Relationship : டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீப ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டவும், ராஷ்மிகாவும் டேட்டிங் செய்துவருவதாகக் கூறப்பட்டு வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான நுவ்வில (Nuvvila) என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் முன்னணி நாயகனாக நடித்த படம் பெல்லி சூப்புலு (pelli choopulu). கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த காமெடி படத்தின் மூலமாகக் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவருக்கு ஒட்டுமொத்த இந்திய அளவிற்குப் பிரபலத்தைக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் அதிரடி நாயகனாக நடித்து சினிமாவில் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்துதான் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. மேலும் இவர் இதுவரை சுமார் 12 படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த படங்களில் நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்தார். மேலும் இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். இந்த படமானதும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து முழுக்க தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். சினிமாவை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் (Rashmika Mandanna) டேட்டிங் செய்துவருவதாக சில ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
மேலும் இவர்கள் இருவரும் பல இடங்களில் மீட் செய்து வருவதாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வரும். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் நான் சிங்கிள் இல்லை என்று கூறியுள்ளார். அதை தொடர்ந்து அவர் பேசிய விஷயமானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் விஜய் தேவரகொண்டா “ஒருவரை காதலிப்பது என்னவென்று எனக்குத் தெரியும், அந்த காதலை நிபந்தனையுடன் செய்யமுடியுமா எனக்குத் தெரியவில்லை. எனது காதல் ஒரு எதிர்பார்ப்புடன் இருக்கிறது, ஒரு காதல் நான் அறியாமல் கூட ஒருவர் மீது வரலாம். அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு காதல் நிபந்தனைகளுடன் இருப்பது சரிதான் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதைத் தொடர்ந்து மற்றொரு நேர்காணலில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் சக நடிகரைக் காதலிப்பது குறித்துக் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் சக நடிகரை டேட்டிங் செய்கிறேன் என்று ஒத்துகொண்டுள்ளார்.
மேலும் அவர் “எனக்கு 35 வயதாகியும் நான் சிங்கிளாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா, அனைவருக்கும் ஒரு கட்டத்தில் திருமணம் நடந்துதான் ஆகும். அது தானாகவே நடக்கும் தவிர அது எனக்குத் தேர்வாக இருக்காது என்று கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிற