Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்

IMF Approves Pakistan Loan : சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கடனாக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் இந்த நிதியை எல்லைத் தாண்டி பயங்கரவாதத்தை ஆதரிக்க பயன்படுத்தக்கூடும் என இந்தியா கவலை தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 May 2025 01:40 AM

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund)  மே 9, 2025 அன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கு  (Pakistan) 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அதிக கடன் சுமையில் உள்ள பாகிஸ்தானுக்கு, தற்போதுள்ள நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை வழங்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ஐஎம்எஃப்க்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கானுக்கு நிதி வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் ஐஎம்எஃப்  நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் முதற்கட்டமாக 1 பில்லியன்டாலர் பணத்தை விடுவித்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் வழங்கிய 1 பில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  நன்றி தெரிவித்துள்ளார் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கடனுக்கு ஐஎம்எஃப் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் ஒப்புதல் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களின் செயல்திறன் குறித்து இந்தியா முன்னதாகவே கவலைகளை எழுப்பியிருந்தது. பொருளாதார விஷயத்தில் பாகிஸ்தானின் மோசமான வரலாறு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் அந்நாடு ஈடுபட்டு வரும் நிலையில் கடனை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. கடந்த மே 9, 2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஎம்எஃப் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் புதிய கடனை வழங்கும் திட்டத்தை இந்தியா எதிர்த்தது.

இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அது மறுபரிசீலனை செய்யப்பட்டு, பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. பாகிஸ்தான் இந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்தும் என்றும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்களை நடத்த அதைப் பயன்படுத்தும் என்றும் கூறி இந்தியா வாக்களிக்க மறுத்தது.

உலகத்துக்கு தவறான முன்னுதாரணம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பது உலகத்துக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும். இது  நிதி நிறுவனங்களின் நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து, இரு தரப்பிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில், சர்வதேச நாணய நிதியம் இந்தக் கடனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி அறிவிப்பு..!
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி அறிவிப்பு..!...
தமிழகத்தில் வெளுக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
தமிழகத்தில் வெளுக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?...
32 விமான நிலையங்கள் மூடல்... இந்தியா எடுத்த ஆக்ஷன்!
32 விமான நிலையங்கள் மூடல்... இந்தியா எடுத்த ஆக்ஷன்!...
பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்...
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பரபரப்பு தகவல்
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பரபரப்பு தகவல்...
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கு 1 மில்லியன் டாலர் கடன் வழங்கிய ஐஎம்எஃப்...
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி
பாகிஸ்தான் 26 இடங்களில் டிரோன் தாக்குதல் - இந்தியா பதிலடி...
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...