தனுஷின் குபேரா படத்துடன் மோதும் வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம்
Actor Dhanush and Vaibhav: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் அந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் படத்துடன் நடிகர் வைபவின் படமும் வெளியாகவுள்ளது.

கோலிவுட் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட் மட்டும் இன்றி டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். நடிகர் தனுஷ் தனது 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்தார். இதில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சரவணன், பிரகாஷ் ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தமிழில் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
குபேரா: இந்த நிலையில் நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் கூட்டணி வைத்தார். குபேரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடிதுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான போய்வா நண்பா பாடலும் ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்: நடிகர் வைபவ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பெருசு. அடல்ட் காமெடியை மையகாம வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் வைபவ் உடன் இணைந்து அவரது அண்ணன் சுனில், நிஹாரிகா என்.எம்., சாந்தினி தமிழரசன், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ் காந்த், விடிவி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர்கள் அருண் கேசவ் மற்றும் விக்ரம் ராஜேஸ்வர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் வைபவ் உடன் இணைந்து நடிகர்கள் அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், மணி, ஜான் விஜய் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.