GV Prakash : ரொமாண்டிக் கதைக்களத்தில்… ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் ‘இம்மோர்டெல்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்!
Immortal Movie First look : தமிழ் சினிமாவில் டிராகன் திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை அடித்தவர் கயாடு லோஹர். இவர் தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இந்த இமோர்டெல் படத்தின் முதல் பார்வையை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம் கிங்ஸ்டன் (Kingston). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி. பிரகாஷே தயாரித்திருந்தார். கிங்ஸ்டன் படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களிலும் நடித்த வருகிறார். இந்நிலையில் தமிழ் ஹிட் நடிகை கயாடு லோஹருடன் (Kayadu Lohar) புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கவுள்ளார். மேலும் இந்த புதிய படத்தை ஏகே என்டர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலுடன், முதல் பார்வை வெளியாகியுள்ளது.
இந்த படத்துக்கு படக்குழு “இமோர்டெல்” (Immortal) என்று தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தின் முதல் பார்வையை வைத்துப் பார்க்கும்போது , இந்த படமானது முற்றிலும் ரொமான்டிக் கதைக்களத்துடன் மாறுபட்ட த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கும் இதுவரை இல்லாத மாதிரி புதுவிதமாக இருக்கிறது.
ஒருவேளை இந்த படமானது க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹாலிவுட் படத்தின் டைட்டிலை போல இந்த படத்திற்கு இமோர்டெல் என்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இமோர்டெல் படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Here is the first look of my next #Immortal @11Lohar … a thriller film @DirMari_Chinna @AKfilmfactory pic.twitter.com/4P3ayI3OlT
— G.V.Prakash Kumar (@gvprakash) May 9, 2025
நடிகை கயாடு லோஹர் ஏற்கனவே தமிழில், இதயம் முரளி மற்றும் எஸ்டிஆர்49 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து 4வது திரைப்படமாக நடிகர் ஜி.வி. பிரகாஷுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை ஏ.கே. என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்து வருகிறார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி. எஸ் இசையமைக்கவுள்ளார். முற்றிலும் ஹாரர் மற்றும் ரொமாண்டிக் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவுள்ளது என்று கூறப்படுகிறது.
நடிகை கயாடு லோஹர் இதயம் முரளி, எஸ்டிஆர் 49 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்துதான் , இந்த இமோர்டெல் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த திரைப்படமானதை வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அதி தொடர்ந்து இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.