Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Weather Update: தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை?

Tamil Nadu weather: தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Weather Update: தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு மஞ்சள்  எச்சரிக்கை?
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 09 May 2025 14:47 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. வேலூரில் 4 செ.மீ. மற்றும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1–3 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. ஈரோடில் 39.2°செல் மற்றும் சேலத்தில் 22.2°செல் வெப்பநிலைகள் பதிவானது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆம் தேதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வேலூரில் 4 செ.மீ. மழை பதிவாக, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 முதல் 3 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் 1 செ.மீ. அளவிலும் மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை நிலவரம்

ஈரோடியில் அதிகபட்ச வெப்பநிலை 39.2°C ஆகவும், சேலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.2°C ஆகவும் பதிவானது. சமவெளிப் பகுதிகளில் வெப்பநிலை 36–39°C, கடலோர பகுதிகளில் 34–37°C, மலைப்பகுதிகளில் 20–28°C வரை பதிவாகி உள்ளது. சில இடங்களில் 2-3°C வரை வெப்பநிலை அதிகரிப்பு காணப்பட்டது.

வானிலை முன்னறிவிப்பு (09–15 மே 2025)

2025 மே 9ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. 2025 மே 10 முதல் 12 ஆம் தேதி வரை லேசான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மே 13 ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை எதிர்பார்க்கப்படுகிறது. 2025 மே 14 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

2025 மே 9 ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் மே 10–12 நாட்களில் சில இடங்களில் 2°C வரை அதிகரிக்கும். மேலும், இந்த நாட்களில் இயல்பைவிட 2–3°C வரை அதிகமாகவும் வெப்பநிலை பதிவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

மே 9 மற்றும் 10 தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37–38°C, குறைந்தபட்சம் 27–28°C வரை இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

2025 மே 9–11 வரை தமிழக கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை எதுவும் இல்லை. ஆனால் 2025 மே 12 மற்றும் 13 தேதிகளில் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடலில் 45–55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி...