Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மார்க் ஷீட்… விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 8ஆம் தேதியான நேற்று வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த பிறகே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மார்க் ஷீட்… விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
Tamil Nadu 12th Exam Revaluation
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 May 2025 14:57 PM

சென்னை, மே 09: சென்னை, மே 09: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துளளது. விடைத்தாள் நகலை இணையம் வாயிலாக பெற்ற பிறகே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 8ஆம் தேதியான நேற்று வெளியானது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.02 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில்,  95.03 சதவீதம்  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளை அதிக பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+2 பொதுத்தேர்வு மறுகூட்டல்

அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, 2025 மே 8ஆம் தேதியான நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மறு கூட்டல் மற்றும் மார்க் ஷீட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க தயாராக இருப்பார்கள். இந்த நிலையில், முக்கிய அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதாவது,  12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணைப்படி, இனிவரும் கல்வியாண்டுகளில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளும் பொருட்டு, முதலில் தங்களது விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம்

விடைத்தாள் நகல் பெற்ற பின்னர், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையினை செயல்படுத்த தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியில், உயிரியியல், விலங்கியல், கணிணி அறிவியல் என  அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும்.

மாணவர் விடைத்தாள் நகல் கோரி தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும், 2025 மே 13ஆம் தேதி காலை 11 மணி முதல் 2025 மே 17ஆம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 செலுத்த வேண்டியிருக்கும்.

நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதன்பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி...
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!...
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!...
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?...
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!...
கன்னியாகுமரி, ஊட்டிக்கு டூர் போறீங்களா? உற்சாக அறிவிப்பு ..!
கன்னியாகுமரி, ஊட்டிக்கு டூர் போறீங்களா? உற்சாக அறிவிப்பு ..!...