அதிநவீன வசதிகளுடன் கூடிய பஞ்சப்பூர் பேருந்து முனையம்.. முதலமைச்சர் திறந்து வைத்தார்!
Trichy's New Panjappur Bus Terminal | திருச்சியில் அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொழில்நுட்ப வசதி, ஏசி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள ரூ.408 கோடி மதிப்பிலான இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி, மே 09 : திருச்சி (Trichy) பஞ்சப்பூர் (Panjappur) பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று ( மே 09, 2025) திறந்து வைத்தார். அதிநவீன வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து முனையம் மூலம் பொதுமக்களின் பயணம் மிகவும் எளிதாக மாறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த பஞ்சப்பூர் பேருந்தி நிலையத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து முனையம்
தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது திருச்சி. திருச்சியில் ஏராளமான தொழிற்சாலைகள், கோயில்கள் உள்ள நிலையில் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருச்சி பேருந்து நிலையம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், பொதுமக்களின் சிரமத்தை போக்கி எளிதாக பயணம் செய்ய திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் பகுதியில் பேருந்து முனையம் கட்டப்பட்டடு வந்தது. இந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில், சுமார் ரூ.408 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( மே 09, 2025) தொடங்கி வைத்தார். முன்னதாக திருச்சி வந்த அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய பஞ்சப்பூர் பேருந்து முனையம்
Trichy Panjappur Integrated Bus Terminal ready for its commissioning on 9th May 2025, a three decade old dream come true. Thank you H’ble CM @mkstalin @KN_NEHRU @Udhaystalin @tiruchisiva @Anbil_Mahesh @duraivaikooffl @ArunNehru_DMK @Collector_Try @Anbutry @TrichyCorp pic.twitter.com/isI2n3wVkG
— Central Tamil Nadu Development Forum (@CauveryZone) May 8, 2025
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மொத்தம் இரண்டு தளங்களை கொண்டுள்ளது. தரைத்தளத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும், முதல் தளத்தில் இருந்து நகர பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, பேருந்து முனையத்தில் இருந்து மொத்தம் 1257 நகர பேருந்துகளும், 1929 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து முனையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 401 பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான இட வசதி உள்ளது. இந்த பேருந்து முனையத்தின் தரை தளம் முழுவதும் ஏசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.