Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. உதவி எண்களை அறிவித்த அரசு.. மீட்க நடவடிக்கை!

India Pakistan Conflict : ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75503 31902, 80690 09901 என்ற எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்.. உதவி எண்களை அறிவித்த அரசு.. மீட்க நடவடிக்கை!
தமிழக அரசுImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 May 2025 17:06 PM

சென்னை, மே 09 : ஜம்மு காஷ்மீரில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75503 31902, 80690 09901 என்ற எண்ணை தமிழக அரசு (tamil nadu goverment) அறிவித்துள்ளது. காஷ்மீர் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் சூழல் நிலவுகிறது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி   பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் சிக்கி இருக்கும் தமிழக மாணவர்கள்

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய பிரதமர் மோடி பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர். பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்கு பிறகு,   இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியது. காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத  முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து,  ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தான் பதிலடி தாக்கியது. அதாவது, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் உள்ள 15 இடங்களில்  பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது.   15 இடங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து, ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதனை இந்தியா சுட்டு வீழ்த்தியது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இப்படியாக இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதில், அப்பாவி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். காஷ்மீர் தமிழக மாணவர்கள் 41  பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதவி எண்களை அறிவித்த அரசு

மேலும், காஷ்மீர் நிலைமைய முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது. அங்குள்ள சூழல் சீரானவுடன் மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களுக்காக  தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902, 80690 09901 என்ற எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.  இந்த எண்கள் மூலமாக மாணவர்கள் உதவியை கோரலாம். nrtwb.chairman@gmail.com என்ற இமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் மாணவர்களை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் பதற்றமான நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி...
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!...
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!...
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?...
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!...