Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Guru Peyarchi 2025: எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

2025 மே மாதம் குருபகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசிக்கு அதிபதியான குருவின் இந்த பெயர்ச்சி, குடும்ப ஒற்றுமை, சுபகாரியங்கள், திருமணம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நல்ல பலன்களைத் தரும். ஆனால், அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தொழில் வளர்ச்சி குறையலாம், எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guru Peyarchi 2025: எல்லாமே கிடைக்கும்.. தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
குரு பெயர்ச்சி - தனுசு ராசிக்கான பலன்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 May 2025 16:24 PM

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரை குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைவார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 11ம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் படியும், மே 14ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின்படியும் குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார் இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பது பற்றி காணலாம். இந்த ராசியை பொறுத்தவரை குருபகவான் தான் ராசிக்கு அதிபதியாவார். தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் சத்ரு, ரோக, ருண ஆகிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் குரு பெயர்ச்சிக்குப் பிறகு மிகவும் அனுகூலமான கிரகமாக மாறுகிறார். இதன் காரணமாக கணவன் மனைவியருக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும், அன்னியோன்யம் அதிகரிக்கும்.

கருத்து வேறுபாடுகள் நீங்கும்

குடும்பத்தில் பல நன்மைகள் நிகழும் .சுப காரியங்கள் செய்வதற்கான காலம் கைகூடும். மிதுனத்தில் இருக்கும் குரு பகவான் தனது சொந்த ராசியை பார்ப்பதால் பெண்களுக்கு திருமணம், குழந்தை வரம் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும்.

பணியிடங்களை பொறுத்தவரை மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஊதிய உயர்வை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அமையும். அக்டோபர் மாதம் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பகவான் மாறுவதால் தொழிலில் அளவோடு தான் வளர்ச்சி இருக்கும். முடிந்தவரை நஷ்டம் ஏற்படாமல் போட்ட முதலீடு கைக்கு வரும். நீங்கள் நியாயமாக உழைத்தாலும் சந்தையில் நிலவும் சில சூழல்களால் லாபம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

செலவுகளை குறைப்பது மிகவும் நல்லது

எந்த ஒரு புதிய முதலீடுகளையும் இந்த காலகட்டத்தில் தள்ளி வைப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்தால் அதில் பார்ட்னரை அனுசரித்து செல்வது லாபத்தை கொடுக்கும்.கலைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சாதகமான வாய்ப்புகள் வந்து சேரும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. எக்காரணம் கொண்டும் எந்த விஷயத்தையும் கடன் வாங்கி செய்யக்கூடாது. குருபகவான் அரசியல் துறைக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் சமூகத்தில் மற்றும் நீங்கள் சார்ந்த கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கல்வித்துறையை பொறுத்த வரை கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் நட்பு என்கிற போர்வையில் எந்த மாணவர்களுடனும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது சிறந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். கிரக நிலைகள் சாதகமாக இருந்த போதிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதனை மேற்கொள்ள வேண்டும்.

ராசியினருக்கான பரிகாரம்

விவசாயத்தை பொருத்தவரை புரட்டாசி மாதம் முடியும் முறையில் வருமானமும் நல்ல விளைச்சலும் இருக்கும் உழைப்பதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் பழைய கடன்கள் இருப்பின் அதில் ஒரு பாதி குறையும்.

பெண்களைப் பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி காலம் என்பது உங்களுக்கு மிகவும் ஆதரவான தருணமாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்லும். வீட்டில் மழலை செல்வம் சத்தம் கேட்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். உடலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து துன்புறுத்தினாலும் அவை விரைந்து நீங்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாழக்கிழமை தோறும் இஷ்ட தெய்வத்தை வணங்கி அருகில் இருக்கும் ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

(ஜோதிடத்தின் அடிப்படையில் தான் இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் டிரோன் தாக்குதல்...
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?...
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்
ஜி.வி. பிரகாஷ்- கயாடு லோஹரின் இம்மோர்டெல் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்...
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?
பருக்கள் இல்லா சருமம் பெற வேம்பு மஞ்சள் சோப்பு தயாரிப்பது எப்படி?...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு...
மதுரை சித்திரை திருவிழாவுக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு......
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!
இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த பிரச்னைகள் வரலாம்!...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி..? முக்கிய அறிவிப்பு...
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!
வறண்ட சருமத்திற்கு முல்தானி மட்டி நன்மை தருமா..? நிபுணர் ஆலோசனை.!...
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...