TN Class 12 Result 2025: பிளஸ் டூ தேர்வு முடிவுகள்..! எப்போது, எங்கு வெளியாகிறது..? A டூ Z விவரம் இதோ!
Tamil Nadu HSE+2 Result 2025: தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2025 அன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளைப் பார்க்கலாம். டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் வழியாகவும் முடிவுகளைப் பெறலாம்.

சென்னை, மே 7: தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் இயக்குநரகத்தால் நாளை 2025ம் தேதி மே 8ம் தேதி வெளியிடுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வானது (12th Class Result 2025) கடந்த 2025 மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளதால், மாணவ மாணவிகள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி..?
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளங்களுக்கு சென்ற பிறகு, 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீட்டு, தங்கள் மதிப்பெண் அடங்கிய அட்டவணை பார்க்கலாம். அதிகாரப்பூர்வ வலைதளங்களை அணுக முடியாத மாணவர்களுக்கு டிஜிலாக்கர் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் மூலமாகவும் முடிவுகள் வரும். மேலும், மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மத்திய கிளை நூலகங்கள் அல்லது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தேசிய தகவல் மையத்திற்கு சென்றும் பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்வது எப்படி..?
- ஸ்டெப் 1 : அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in பக்கத்திற்கு செல்லவும்.
- ஸ்டெப் 2 : முகப்புப் பக்கத்தில் உள்ள TN HSC முடிவு 2025 இணைப்பை க்ளிக் செய்யவும்.
- ஸ்டெப் 3: மாணவ, மாணவியர்கள் உள்நுழைவு விவரங்களை நிரப்ப வேண்டிய புத்திய பக்கம் ஒன்று தோன்றும்.
- ஸ்டெப் 4: அதை நிரப்பியதும் சமர்ப்பி என்பதை க்ளிக் செய்தால், உங்கள் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
- ஸ்டெப் 5: உங்கள் பெயருடன் அனைத்து சரியாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளவும்.
- ஸ்டெப் 6: உங்களது தேவைகளுக்காக அதன் அச்சிடப்பட்ட நகலை எடுத்துக்கொள்ளுங்கள்.
தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
அரசு தேர்வுகள் இயக்குநரகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில், “ மார்ச் 2025 உயர்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் வருகின்ற 2025 மே 8ம் தேதி அதாவது நாளை காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைகளால் வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை காலை 9.15 மணி முதல் யுமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.