தீபாவளியன்று இந்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சரவெடிகளை தவிருங்கள் – தமிழக அரசு அறிவிப்பு
Diwali 2025 : தீபாவளி பண்டிகை அக்டோபர் 20,2025 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாட்டை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சரவெடி போன்ற அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள் மற்றும் வாங்குவது, பலகாரங்கள் செய்வது என மக்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். இந்த நிலையில் தீபாவளியன்று கனமழை (Heavy Rain) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் வியாபாரிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி தீபாவளி நாளான அக்டோபர் 17, 2025 அன்று காலை 6 மணி முதல் 7 மணிவ வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விடைபெற்ற தென்மேற்கு பருவமழை…. தீபாவளிக்கு மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
- பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்.
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி நாளில் மழை பெய்யுமா?
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 16 முதல் 18, 2025 வரையிலான நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தீபாவளி தினத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளியன்று கனமழை பெய்தது. அப்போது தமிழக முழுவதும் தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வியாபாரிகள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான், தீபாவளி அன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.