60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை

Free Bus Passes: 2025-26 நடப்பு கல்வியாண்டில் தகுதியுடைய 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லாத பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகம் எனவும் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் - தமிழக அரசு புதிய சாதனை

மாதிரி புகைப்படம்

Published: 

30 Dec 2025 20:53 PM

 IST

சென்னை, டிசம்பர் 30: பள்ளி மாணவர்களுக்கு (School Student) கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு புதிய சாதனையை படைத்துள்ளது. நடப்பு கல்வியாண்டான 2025–26 ஆம் ஆண்டில், சுமார் 60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் இணைந்து இதுவரை இல்லாத அளவில் 60 லட்சம் இலவச பேருந்து பயண அட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 2023 –24 கல்வியாண்டு வரை, பள்ளிகளில் இருந்து மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் புகைப்படங்கள் பெறப்பட்டு, அவற்றை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொகுத்து, அச்சகங்களில் அச்சிடப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த நடைமுறை காலதாமதத்தையும், போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் அதிகமான ஈடுபாட்டையும் தேவைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திமுகவின் தேர்தல் அறிக்கை…. மக்களும் நேரடியாக கருத்து தெரிவிக்கலாம்… திமுகவின் புதிய செயலி

தமிழக அரசு புதிய சாதனை

இந்த சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில், 2024–25 கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் இஎம்ஐஎஸ் இணையதளத்தில் உள்ள மாணவர் தரவுகளை பயன்படுத்தி பயண அட்டைகள் அச்சிடப்பட்டன. இதன் விளைவாக, முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாக பயண அட்டைகள் வழங்கப்பட்டன. 2023–24 கல்வியாண்டில் 20.06 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், 2024–25 கல்வியாண்டில் 25.01 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, நடப்பு 2025–26 கல்வியாண்டில், தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் எளிமையான முறையில் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் இஎம்ஐஎஸ் இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து விரைவாக பயண அட்டைகள் தயாரிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!

இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, நடப்பு கல்வியாண்டில் சுமார் 60 லட்சம் இலவச பேருந்து பயண அட்டைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் கல்வியை எளிதாக்கும் வகையில், தேவையுள்ள அனைத்து மாணவர்களும் எந்தச் சிரமமும் இன்றி பள்ளிக்குச் செல்லும் வசதியை உருவாக்கியுள்ள தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை, மாணவர் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட துறையாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?