வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் இருமடங்கு உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ. 6,000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் இருமடங்கு உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

19 Nov 2025 12:44 PM

 IST

நவம்பர் 19, 2025: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ. 6,000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகத்தில் நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஒரு மாத காலம் நடைபெற உள்ளன. நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி டிசம்பர் 4, 2025 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 9, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்:

இந்தப் பணியின் போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தேவையான படிவங்களை வழங்குவார்கள். பூர்த்தி செய்த பின்பு மீண்டும் அதை திருப்பிப் பெறுவார்கள். தமிழகத்தில் இந்தப் பணிகள் தொடரக்கூடாது என பல தரப்பினர் கூறி வந்தாலும், இந்திய தேர்தல் ஆணையம் இந்தப் பணிகளைத் தடையின்றி, தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தப் பணிகள் தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 94.74% SIR படிவங்கள் விநியோகம்.. தேர்தல் ஆணையம் தகவல்

இது ஒரு பக்கம் இருக்க, வாக்காளர் படிவத்தில் மூன்று பகுதிகள் இருப்பதால் மக்கள் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது எனவும் கூறுகின்றனர். மேலும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்காமையும், சரியான திட்டமிடல் இல்லாமையும், போதிய பணியாளர்கள் இல்லாமையும் காரணமாக இந்தப் பணிகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதீத பணிச்சுமை என குற்றச்சாட்டு:

அதேபோல், இந்தப் பணியின் காரணமாக அதிக பணிச்சுமை மற்றும் மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர். இதனை காரணமாகக் காட்டி நவம்பர் 18, 2025 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், இந்தக் காரணங்களை முன்வைத்து பணி நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: தமிழகத்தில் தற்போது வரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. சுகாதார துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

நிலை அலுவலர்களுக்கு சம்பள உயர்வு:

இந்த சூழலில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் ஊதியம் ₹6,000 லிருந்து ₹12,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் பணிச்சுமைக்கு ஒரு அளவுக்கு தீர்வு கிடைக்கும் என அரசு நம்புகிறது. தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சம்பள உயர்வு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத் தொகை ₹1,000 லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000 லிருந்து ₹18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?