பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. ராகுல் காந்தியுடன் பேரணி.. என்ன மேட்டர்?

Rahul Gandhi Voter Adhikar Yatra : பீகாரில் எதிர்க்ட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று கலந்து கொள்கிறார். தர்பங்காவில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. ராகுல் காந்தியுடன் பேரணி.. என்ன மேட்டர்?

ராகுல் காந்தி - முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

27 Aug 2025 07:19 AM

சென்னை, ஆகஸ்ட் 27 :  தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin Bihar Visit) 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று பீகார் செல்கிறார். அங்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் (Rahul Gandhi) பேரணியில் (Voter Adhikar Yatra) அவர் கலந்து கொள்கிறார். இதற்காக 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் பேரணியில் அவர் கலந்து கொள்கிறார். 2025 அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் பீகாரில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்பிறகு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தெரியவந்தது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்தியா கூட்டணியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதிலளித்தது. அதாவது, ராகுலின் குற்றச்சாட்டை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியது.

Also Read : ராகுல் காந்தி குற்றச்சாட்டு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்..

ராகுல் காந்தியின் பேரணியில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்

இதனை எதிர்த்து, ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டு வருகிறார். 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி பீகார் இந்த யாத்திரையை அவர் தொடங்கினார். இந்த யாத்திரை 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் பீகாருக்கு புறப்படுகிறது. காலை 10 மணிக்கு பீகாரில் உள்ள தர்பங்கா விமான நிலையத்தில் தரையிறங்குவார்.

அங்கிருந்து யாத்திரை நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். காலை 11 மணியளவில் ராகுல் காந்தியுடன் இணைந்து யாத்திரை மேற்கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவருடன் செல்கிறார்.

Also Read : ‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

இந்த நிகழ்வுக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார். இந்த பேரணியில் பிரியங்க காந்தியுடன் உடன் இருப்பார்அடுத்தடுத்த நாட்களில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.