நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..
Nalam Kaakum Stalin Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று அதாவது 2025, ஆகஸ்ட் 2 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 2, 2025: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் இந்த திட்டம் மூலம் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் என்று திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 முகாம்கள் அமைக்கப்பட்டு பல்வேறு அரசு துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. அரசுத்துறை சேவைகள் மக்களுக்கு எளிமையான முறையில் தங்கள் இருக்கும் பகுதிகளில் கிடைக்க ஏதுவாக இந்த திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் சுகாதாரம் ரீதியான சேவைகள் மக்கள் எளிமையாக அணுக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள்:
🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன… வாரந்தோறும் சனிக்கிழமைகளில்!
💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள்… pic.twitter.com/L4XBDqbTf2
— M.K.Stalin (@mkstalin) July 31, 2025
இந்த திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னையில் இருக்கக்கூடிய 15 மண்டலங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வரக்கூடிய மக்களுக்கு பல்வேறு பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரத்த அழுத்தம்ம் சர்க்கரை நோய், இருதய நோய்கள், இசிஜி எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இணையும் பறக்கும் ரயில் திட்டம்.. முதற்கட்ட ஒப்புதல்..
சனிக்கிழமைகளிலும் முகாம்கள் நடைபெறும்:
இந்தத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 2ஆம்தேதி ஆன இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய அவர்கள். “ தமிழகத்தில் தற்போது பெரிய சவாலாக இருப்பது தொற்ற நோய்களாகும். இதனால் உடல் நிலையை மருத்துவ ரீதியாக முன்கூட்டியே பரிசோதிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அந்த வகையில் மக்களுக்கு எளிமையான முறையில் மருத்துவ சேவைகள் வழங்கிட இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது. அனைவருமே இதில் பங்கேற்கலாம். மாவட்டம் தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்கள் சனிக்கிழமைகளிலும் இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.
மேலும் படிக்க: மதுரை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், மனநல பாதிப்புகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் இந்த முகாம்கள் மூலம் சேவைகள் வழங்கப்படும். மொத்தமாக 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. முகம் நடைபெறும் இடங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் இருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே whatsapp மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.
2026 பிப்ரவரி மாதம் வரை நடக்கும் முகாம்:
இந்த முகாம்களில் ஆதிதிராவிடர்கள், தூய்மை பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறை சார்ந்த துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு உடல் நலன் மற்றும் நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கக்கூடிய இந்த சிறப்பு முகாம்கள் பிப்ரவரி மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த முகாம் நீடிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளனர்.