அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்.. இன்னும் செய்வோம் – சிங்கார சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

உள்கட்டமைப்பு மேம்பாடு, பாலங்கள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்ற திட்டங்களும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்.. இன்னும் செய்வோம் - சிங்கார சென்னை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

கோப்பு புகைப்படம்

Published: 

14 Mar 2026 06:56 AM

 IST

சென்னை, மார்ச் 14, 2026: அரை நூற்றாண்டு வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதோடு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்கட்டமைப்பு மேம்பாடு, பாலங்கள், சாலை வசதிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் புதிய பூங்காக்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் போன்ற திட்டங்களும் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: லஞ்ச புகார்.. சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த ஊழல் தடுப்பு போலீசார்.. அடுத்து நடந்த சம்பவம்!

அரைநூற்றாண்டு சாதனை 5 ஆண்டுகளில்:

இந்த நிலையில், சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரை நூற்றாண்டு வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது: “சென்னையில் அரை நூற்றாண்டு வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி. மொத்தம் 36 பாலங்கள் அமைக்கும் திட்டத்தில் 19 மேம்பாலங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் 17 பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!

சிங்கார சென்னையின் உட்கட்டமைப்பு:

அதேபோல் பூங்காக்கள் மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைப்புகள், பள்ளிகள் மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாடு, வட சென்னை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தவிர முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், புதிய விளையாட்டு அரங்கங்கள், நவீன வசதிகளுடன் கூடிய நகர மாளிகைகள், புதிய வடிவமைப்பில் பேருந்து நிலையங்கள், தாழ்த்தள (low-floor) பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சென்னையின் தோற்றம் மாற்றம் பெற்றுள்ளது.

இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, உலகத் தரமான உள்கட்டமைப்புடன் கூடிய எழில்மிகு சென்னையை 2030க்குள் உருவாக்குவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..