TN Class HSE+1 Result 2025: +1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.. முழு விவரம்!

Tamil Nadu Board Class 11 Result 2025 : தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 11ஆம் வகுப்பு தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN Class  HSE+1 Result 2025: +1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.. முழு விவரம்!

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Updated On: 

16 May 2025 10:16 AM

சென்னை, மே 16 : தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு (TN Class HSE+1 Result 2025) எழுதிய மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண் விவரங்களை மதியம் 2 மணிக்கு இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், அவர்களில் 7,43,232 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது,  . மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவிகள் 4,03,949 பேரும், மாணவர்கள் 3,39,283 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிட்டதட்ட மாணவர்களை விட 6.43 சதவீத மாணவிகள் அதிகம் பேர் 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+1 தேர்வு முடிவுகள் வெளியீடு

2024ஆம் ஆண்டு கல்வியாண்டை விட, 2025ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.92 சதவீதம் கூடுதலாக உள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் 91.17 சதவீதம் தேர்ச்சி விகிதம் இருந்த நிலையில், தற்போது 92.09 தேர்சசி விகிதம் உள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் 87.34 சதவீத தேர்ச்சியும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 93.09 சதவீத தேர்ச்சியும், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.03 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. மேலும், இருபாலர் பள்ளிகளில் 92.40 சதவீத தேர்ச்சியும், பெண்கள் பள்ளிகளில் 95.02 சதவீத தேர்ச்சியும், ஆண்கள் பள்ளியல் 83.66 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 97.76 சதவீத தேர்ச்சி பெற்றது அரியலூர் மாவட்டம். அடுத்ததாக, ஈரோடு மாவட்டம் 96.97 சதவீதமும், விருதுநகர் மாவட்டம் 96.23 சதவீதமும், கோவை மாவட்டம் 95.77 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டம் 95.07 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்

பாடவாரியாக பார்த்தால், கணிணி அறிவியல் பாடத்தில் 99.75 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதன்படி, கணிணி அறிவியில் பாடத்தில் 3,535 மாணவர்கள் 100க்கும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக, கணிதம் பாடத்தில் 1,338 மாணவர்களும், வேதியில் பாடத்தில் 593 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 806 மாணவர்களும், கணிணி பயன்பாடுகள் பாடத்தில் 761 மாணவர்களும், இயற்பியல் மாவட்டத்தில் 390 மாணவர்களும், கணக்கு பதவியில் பாடத்தில் 111 மாணவர்களும், பொருளியில் பாடத்தில் 254 மாணவர்களும், வணிகக் கணிதம் புள்ளியில் பாடத்தில் 117 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், வரலாறு பாடத்தில் 35 மாணவர்களும், விலங்கியல் பாடத்தில் 2 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 4 மாணவர்களும், உயிரியியல் பாடத்தில் 91 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 39 மாணவர்களும், தமிழ் பாடத்தில் 41 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 9,205 மாற்றுத்திறனாளிக மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8,460 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில், 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,326 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியவர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.