இன்று தொடங்கும் 49வது சென்னை புத்தக கண்காட்சி.. என்னவெல்லாம் ஸ்பெஷல்?

49th Book Fair In Chennai | சென்னையில் இன்று (ஜனவரி 08, 2026) தொடங்க உள்ள 49வது புத்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்த கண்காட்சிக்காக சென்னையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தொடங்கும் 49வது சென்னை புத்தக கண்காட்சி.. என்னவெல்லாம் ஸ்பெஷல்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Jan 2026 23:49 PM

 IST

சென்னை, ஜனவரி 08 : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 49வது புத்தக கண்காட்சி (49th Book Fair) சென்னையில் (Chennai) இன்று (ஜனவரி 08, 2026) தொடங்க உள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், 49வது புத்தக கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி

இன்று தொடங்கும் இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 21, 2026 வரை நடைபெற உள்ளது. அதன்படி, மொத்தம் 10 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின், ஹார்ப்பர் காலின்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

இதையும் படிங்க : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை 6 ரூபாய் உயர்வா? – உண்மை என்ன?

புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

வழக்கமாக புத்தக கண்காட்சியில் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், இந்த புத்தக கண்காட்சிக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் சொற்பொழிவுகள் நடைபெறும். வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு குழந்தைகளுக்கான தனி பூங்கா மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் குயின் பதிப்பகத்திற்கு இந்த முறை தனி அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சுற்றுலா பயணிகள் வானில் பறக்கலாம்…25 கி.மீ.அலாதி பயணம்…வேளாங்கண்ணியில் விரைவில் வருகிறது!

வாசகர்களுக்கு அனுமதி இலவசம்

இந்த 49வது புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தரும் நிலையில், இந்த ஆண்டும் ஏராளமானவர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் புத்த கண்காட்சி நடைபெறும் மைதானம் முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை இலவச மினி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..