டிச. 16 வரை வாக்காளர் பட்டியல்.. உடனே நிரப்பப்பட்ட படிவங்கள் சமர்பிக்க வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

ECI - SIR: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் நிரப்பிய கணக்கெடுப்பு படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச. 16 வரை வாக்காளர் பட்டியல்.. உடனே நிரப்பப்பட்ட படிவங்கள் சமர்பிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

கோப்பு புகைப்படம்

Published: 

05 Dec 2025 07:12 AM

 IST

சென்னை, டிசம்பர் 5, 2025: தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் நிரப்பிய கணக்கெடுப்பு படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நவம்பர் 4, 2025 அன்று தொடங்கின. அன்றிலிருந்து ஒரு மாத காலம், அதாவது டிசம்பர் 4, 2025 வரை இந்தப் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் டிசம்பர் 11, 2025 வரை நடைபெறும் என்றும், அதன் பின்னர் டிசம்பர் 16, 2025 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் SIR பணிகள்:

இந்த சூழலில், இந்த பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:“தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்பு காலம் டிசம்பர் 11ஆம் தேதியுடன் நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட தேதி டிசம்பர் 11 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, இதுவரை திரும்ப பெறப்படாத கணக்கெடுப்பு படிவங்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: 2வது முறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு.. திருப்பரங்குன்றத்தில் நீடிக்கும் பதற்றம்!

வாக்காளர்கள் விரைந்து படிவங்களை சமர்பிக்க வேண்டும்:

திரும்ப பெறப்படாத கணக்கெடுப்பு படிவங்களின் பட்டியலில், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்தவர்கள் போன்ற விவரங்களைக் கொண்டு திருத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியல் டிசம்பர் 11 அன்று கணக்கெடுப்பு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க: சென்னையில் மிதமான மழை இருக்கும்.. 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட்..

அனைத்து வாக்காளர்களும் தாங்கள் நிரப்பிய கணக்கெடுப்பு படிவங்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சமர்ப்பிக்கும் காலம் டிசம்பர் 16 முதல் ஜனவரி 15, 2026 வரை ஆகும். இந்த காலப்பகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் மேலும் ஒரு திரைப்பட நகரம் - வெளியான அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட உலகின் முதல் ஏலியன் கோவில் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தடைகளை வென்று மருத்துவரான 3 அடி மனிதர் - அவரது வெற்றிக்கான காரணம் இதுதான்
இறந்த பிறகும் 57 வருடங்களாக எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்